திமுக தலைவர் கலைஞர் மு.கருணாநிதி 95 ஆவது பிறந்தநாளையொட்டி வேப்பேரி பெரியார் திடலில் விழா நடந்தது.
இதில் நடிகர்கள் சத்யராஜ், ராஜேஷ், மயில் சாமி மற்றும் மலேசிய நாடாளுமன்ற உறுப்பினர் இளங்கோவன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
விழாவில் கலந்து கொண்டு பேசிய நடிகர் சத்யராஜ்,
நீதியின் மீது மக்களுக்கு நம்பிக்கை போகும் போதுதான் புரட்சி வெடிக்கும் என்றும், நாடு சுடுகாடு ஆவதற்கு புரட்சி வெடிக்காது.
மேலும், இரும்புக்கரம் கொண்டு அடக்குவது அல்ல ஆன்மிக அரசியல், அன்புக்கரம் கொண்டு அரவணைப்பதே ஆன்மிக அரசியல் என விளக்கம் அளித்தார்.
ரஜினிகாந்த்தை நடிகர் சத்யராஜ் இந்த விழாவில் நேரடியாகத் தாக்கிப் பேசினார்.இது பலரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியது.