நாம் தமிழர்- மதிமுக மோதல், உளவுத்துறையின் திட்டமிட்ட சதி?

நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் ம.தி.மு.க பொதுச்செயலாளர் வைகோ இருவரும் வெவ்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக மே 19 காலை திருச்சி வந்தனர். இருவரும் ஒரே விமானத்தில் வந்தனர்.

இருவரையும் வரவேற்க அவர்களது கட்சித்தொண்டர்கள் விமான நிலையத்தில் குவிந்தனர்.

இரு கட்சி தொண்டர்களும் ஒருவருக்கொருவர் போட்டி போட்டு வாழ்த்து முழக்கம் எழுப்பினர். பின்னர் இரு கட்சித்தொண்டர்களுக்கு இடையிலும் வாய்த்தகராறு ஏற்பட்டது.

பின்னர் அது மோதலாக மாறியது. ஒருவருக்கொருவர் கொடிக்கம்புகளால் தாக்கி கொண்டனர்.

இதில் சிலருக்குக்காயம் ஏற்பட்டது. இதில் நாம் தமிழர் கட்சித் தொண்டர் ஒருவர் மயங்கி விழுந்தார். அவரை மருத்துவமனையில் அனுமதித்தனர்.

இந்த மோதலின் போது சீருடை இல்லாமல் சாதாரண உடையில் இருந்த உளவுப்பிரிவு காவலர்களுக்கும் அடி விழுந்தது என்று சொல்லப்படுகிறது.

இது பலத்த சந்தேகங்களை ஏற்படுத்தியுள்ளது.

அண்மைக்காலமாக மத்திய அரசுக்கெதிரான போராட்டங்கள் தமிழகத்தில் வலுத்துவருகின்றன. இதனால் மத்திய ஆட்சிக்கு கடும் அவப்பெயர் உருவாகிவிட்டது.

இப்படியே தொடர்ந்தால் அடுத்த தேர்தலில் பாஜக சார்பில் போட்டியிடக்கூட ஆட்கள் இருக்கமாட்டார்கள்.

எனவே மத்திய அரசுக்கெதிராகப் போராடுகிறவர்களை ஒருவருக்கொருவர் மோதவிட்டு சிக்கலை திசை திருப்பிவிடலாம் என்றும் உளவுத்துறை மூலம் மோதலை அரங்கேற்றலாம் என்றும் திட்டமிட்டிருக்கின்றனராம்.

அதன் வெளிப்பாடுதான் திருச்சி விமான நிலைய மோதல், முதலில் அடித்தவர் யார்? என்று தேடினால் உண்மைகள் வெளிவரும் என்று சொல்கின்றனர்.

Leave a Response