சத்யராஜ் செய்வதை கமல் , ரஜினி செய்யாதது ஏன்?

தமிழர்களின் காவிரி உரிமைக்காகவும் மத்திய பாஜக வின் தொடர் தமிழர் விரோத போக்கை கண்டித்தும் திரையுலகினர் நடத்திய மெளன போராட்டத்தில் ..

அரசியல் சிஸ்டம் சரியில்லை ஆன்மீக அரசியலை கொண்டு வரப்போகிறேன் எனக் கூறும் ரஜினியும் இடத்திற்கு ஏற்றார் போல் பகுத்தறிவுவாதியாகவும் ஆன்மீகவாதியாகவும் நடித்து தன்னை ஒரு அரசியல் பச்சோந்தியாக வெளிப்படுத்திக்கொண்டிருக்கும் நடிகர் கமலும் மத்திய பாஜக வையோ அல்லது மாநில அரசையோ ஒரு வார்த்தை கூட விமர்சிக்காமல் மெளனமாக இருந்தனர் …இது ஏன் என்ற விமர்சனங்கள் எழுந்திருக்கிற நிலையில் அதற்கான பதில்

ரஜினி கமல் இருவருமே மோடியின் கரங்கள் பாஜக வின் குரல்கள் என்பதுதான் உண்மை அதனால் அவர்கள் வாய்திறக்கமாட்டார்கள்

நடிகர் நடிகைகள் எல்லாம் திரளும்போது தாம் பங்கேற்கவில்லை என்றால் தமிழர்கள் தங்களை யார் என்று அடையாளம் கண்டுபிடித்து விடுவார்கள் என்ற பய உணர்வு மட்டுமே போராட்டத்தில் கமல் ரஜினி கலந்துகொண்டதற்கான காரணம் என்பதை நினைவில் கொள்ள வேண்டும் ..

உரிமையை முழங்க வேண்டிய இடத்தில் முழங்காதவனும் பேச வேண்டிய நேரத்தில் மெளனமாக இருப்பவனும் துரோகிகள் அல்லது கோழைகள் என்பது தெளிவு …

ஆனால் உரிமையை முழங்க வேண்டிய இடத்தில் முழங்கி தன் எதிர்ப்புணர்சியை வெளிப்படுத்தினார் நடிகர் சத்யராஜ் …

சத்யராஜ் அவர்களால் எழுப்ப முடிந்த உரிமை முழக்கத்தை ரஜினியாலோ கமலாலோ எழுப்ப முடியாது காரணம் அவர்கள் இருவருமே பாஜக வின் கைப்பாவைகள் காவிகளின் கள்ளக் குழந்தைகள் என்பதை மீண்டும் மீண்டும் கூறுகிறேன் …

மடியில் கணம் இல்லையேல் வழியில் பயம் இருக்காது என்கிற கூற்றுக்கேற்ப நடிகர் சத்யராஜ் அவர்கள் வருமான வரித்துறைக்கோ அல்லது மத்திய அரசின் அமுலாக்க துறைக்கோ பயப்பட மாட்டார் காரணம் அவர் எங்கும் எதிலும் நேர்மையாக இருப்பவர் …

ஆனால் ரஜினியாலோ கமலாலோ அப்படி நேர்மையாக பயமின்றி இருக்க முடியாது மத்திய அரசு நெருக்கடி கொடுத்தால் நாட்டைவிட்டு ஓடிப்போகவும் தயங்க மாட்டார்கள் விஸ்வரூபம் படப்பிரச்சினைக்கு நாட்டை விட்டு போவேன் என்று சொன்ன கோழைதானே கமல் …

ஆக தமிழ்நாட்டில் காலூன்ற வேண்டும் என நினைக்கிற தமிழின விரோத கட்சியான பாஜக வுக்கு நிழலாகவும் அவர்களின் திட்டங்களுக்கு மறைமுகமாக செயல்படும் சூத்திரதாரிகளாகவும் செயல்படும் ரஜினி கமல் ஆகிய இரண்டு நபர்களையும் துவக்கத்திலியே துவண்டு விழும் அளவிற்கு புறக்கணிக்க வேண்டும் …

விஷச் செடிகளை வளரவிடுவதும் படற விடுவதும் தமிழினத்திற்கான பேராபத்து என்பேன் …

ரஜினியும் கமலும் பேசாமலேயே இருக்கட்டும் அதுதான் அவர்களின் குணம் …

புரட்சித் தமிழன் சத்யராஜ் போன்றவர்கள் பேசட்டும் அதுதான் உண்மையான நேர்மையான தமிழினத்தின் ஆதரவுக் குரல்கள்

சிபிசந்தர்
மாநில கொள்கை பரப்புச் செயலாளர்
விசிக

Leave a Response