காவிரி தீர்ப்பு – கமல் ரஜினி ஆகியோரின் கருத்து

காவிரி வழக்கில் தீர்ப்பு வெளியான பின்பு நடிகர் கமல்ஹாசன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது…

உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பில் காவிரியில் தண்ணீர் வரத்து குறைக்கப்பட்டது எனக்கு ஏமாற்றம் அளிக்கிறது. ஆனாலும் சிறிய மன நிம்மதி இதில் இருக்கிறது. 10 வருடங்களுக்கு முன்பு ஒரு கூட்டத்தில், நாமெல்லாம் குரங்காக இருந்தபோது காவிரி ஓடிக்கொண்டிருந்தது. இப்போது திடீரென்று அதை சொந்தம் கொண்டாட முடியாது என்று கோபத்தில் சொன்னேன். அதே எதிரொலி இப்போது சுப்ரீம் கோர்ட்டில் வந்தது ஆறுதலாக இருந்தது

என்று சொன்னார்.

மாலை 6 மணிக்கு மேல் ட்விட்டர் மூலம் ரஜினிகாந்த் தனது கருத்தைப் பதிவு செய்துள்ளார்.

அதில்….

காவிரி நதிநீர் பங்கீட்டில் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு தமிழக விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மேலும் பாதிப்பதாக உள்ளதால் மிகுந்த ஏமாற்றமளிக்கிறது.

மறு பரிசீலனை மனுத்தாக்கல் செய்ய தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Leave a Response