திருப்பூரில் பாஸ்போர்ட் சேவை மையம் – சாதித்த சத்யபாமா எம்.பி

திருப்பூர் எம்.பிக்கு மாண்புமிகு மத்திய வெளியுறவு துறை அமைச்சர் திருமதி சுஷ்மா சுவராஜ் அவர்களின் 1 பிப்ரவரி 2018 ஆம் தேதியிட்ட கடித்த்தின் விவரம்.

தமிழகத்தின் முக்கிய தொழில்நகரங்களில் ஒன்றாகத் திகழ்கிறது. இன்ஹ்கிருந்து உலக்நாடுகள் பலவற்றிற்கும் ஆடைவகைகள் ஏற்றுமதி செய்யப்படுகின்றன. அந்நகரில் பாஸ்போர்ட் சேவை மையம் ஒன்றை அமைக்கவேண்டும் என்பது அப்பகுதி மக்களின் வெகுநாள் கோரிக்கை.

இக்கோரிக்கையை நிறைவேற்ற திருப்பூர் தொகுதி அதிமுக பாராளுமன்ற உறுப்பினர் சத்யபாமா தீவிர முயற்சிகள் மேற்கொண்டார். இது தொடர்பாக பாராளுமன்றத்தில் பேசியதோடு தனிப்பட்ட முறையிலும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளைத் தொடர்பு கொண்டு பேசிவந்தார்.

அவருடைய தீவிர முயற்சிக்குப் பலன் கிடைத்துள்ளது. திருப்பூரில் பாஸ்போர்ட் சேவை மையம் அமைக்க மத்திய அரசு முடிவெடுத்துள்ளது. இத்தகவலை மத்திய அமைச்சர் சுஷ்மாசுவராஜ் திருப்பூர் பாராளுமன்ற உறுப்பினர் சத்யபாமாவுக்கு கடிதம் மூலம் தெரியப்படுத்தியிருக்கிறார்.

அக்கடிதத்தில்….

தமிழகத்தில் புதிய அஞ்சலக கட்டடம் மற்றும் பாஸ்போர்ட் சேவை மையம் அமைப்பது தொடர்பாக 2017 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 20 ஆம் தேதி மக்களவையில் விதி எண் 337 இன் கீழ் சிறப்புக் கோரிக்கை விடுத்தீர்கள்.

இந்தக் கோரிக்கையில் தெரிவித்த அனைத்து கவலைகளையும் நாங்கள் உணர்ந்துள்ளோம்.

திருப்பூரில் அஞ்சலக பாஸ்போர்ட் சேவை மையத்தை அமைப்பதற்கு முடிவெடுக்கப்பட்டுள்ளது என்பதை நாங்கள் உங்களுக்கு தெரிவித்துக்கொள்ள விரும்புகிறோம்.

இந்த அஞ்சலக பாஸ்போர்ட் சேவை மையத்தை அமைப்பதற்காக அஞ்சல் துறையுடன் மத்திய வெளியுறவு அமைச்சகம் நெருக்கமாக தொடர்புகொண்டு பணியாற்றிவருகிறது. புதிய இடத்தில் கட்டடம் கட்டுவதை விடுத்து ஏற்கனவே செயல்பட்டு வரும் அஞ்சலகத்தில் இந்த சேவையையும் இணைப்பது குறித்து இரண்டு அமைச்சகங்களும் பரிசீலித்து வருகின்றன. இந்த அஞ்சலக பாஸ்போர்ட் சேவை மையத்தை செயல்படுத்துவதற்கான தொழில்நுட்ப சாதனங்களும் வாங்கப்பட்டுள்ளன. தொழில்நுட்பம் சாராத சாதனங்களை வாங்குவதற்கான ஏற்பாடுகளும் முழுமையடையும் நிலையில் உள்ளதால் விரைவில் திருப்பூரில் அஞ்சலக பாஸ்போர்ட் சேவை மையம் செயல்பாட்டுக்கு வரும்.

மேற்குறிப்பிடப்பட்டுள்ளவை உங்களது கவலைகளை போக்கும் என்று நம்புகிறோம். நன்றி.

இவ்வாறு அந்தக் கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.

இதற்கு நன்றி தெரிவித்து சத்யபாமா எழுதியுள்ள கடிதத்தில்,

என் தீவிர முயற்ச்சியின் பலனாக திருப்பூரில் தபால் அலுவலகம்/பாஸ்போர்ட் சேவா கேந்திரா அமைக்க மத்திய அமைச்சகம் ஒத்துக்கொண்டது என்பதை மனப்பூர்வமான மகிழ்ச்சியோடு தெரிவித்துக்கொள்கிரேன். மாண்புமிகு வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் அவர்களுக்கு நெஞ்சார்ந்த நன்றி.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Leave a Response