இளம் விஞ்ஞானியை வெளிச்சத்துக்கு கொண்டுவர முயற்சிக்கும் ஜி.வி.பிரகாஷ்..!


ஜி.வி. பிரகாஷ், இசையமைப்பாளராகவும், நடிகராகவும் சினிமாவில் ஜொலித்து வருகிறார். அவ்வப்போது நாட்டில் நடக்கும் அனைத்திற்கும் முதல் ஆளாக குரல் கொடுத்து வருகின்றார். எந்த ஒரு சின்ன நிகழ்விற்கும் தன் கருத்தை முன் வைத்து வருகிறார்.

இந்நிலையில் தானாக தெருவிளக்குகள் பகலில் அணைந்து இரவில் எரியும் சென்சேஷன் சுவிட்ச் கண்டுபிடித்து 1500முறை மனுகொடுத்தும் அங்கீகாரம் கிடைக்காததால் விரக்தியில் ஆவணங்களை கலெக்டர் அலுவலகத்தில் வீசிச்சென்றுள்ளார் ஈரோடை சார்ந்த செந்தில் என்பவர்.

இவருக்கு நியாயம் கிடைக்க பலரும் இந்த தகவலை ஷேர் செய்ய, ஜி.வி.பிரகாஷும் தன் டுவிட்டர் பக்கத்தில் ஷேர் செய்துள்ளார்

Leave a Response