ராஜஸ்தான்,மேற்குவங்கத்தில் பாஜக படுதோல்வி – எதிர்க்கட்சிகள் உற்சாகம்

ராஜஸ்தான் மற்றும் மேற்குவங்க மாநிலங்களில் காலியாக உள்ள மக்களவை, சட்டப்பேரவை தொகுதிகளுக்கான தேர்தல் ஜனவரி 29ம் தேதி நடந்தது. இடைத்தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டன. ராஜஸ்தான் மாநிலம் அல்வார், அஜ்மீர் மக்களவை தொகுதிகளில் ஆளும் பா.ஜ.க வேட்பாளரை வீழ்த்தி காங்கிரஸ் வேட்பாளர் வெற்றி பெற்றார். ராஜஸ்தானின் மண்டல்கர் சட்டப்பேரவை தொகுதியிலும் காங்கிரஸ் அமோக வெற்றிப் பெற்றுள்ளது. மண்டல்கர் தொகுதியில் 12,000 வாக்குகள் வித்தியாசத்தில் பா.ஜ.கவை வீழ்த்தியது காங்கிரஸ்.

இதேபோன்று மேற்குவங்க மாநிலத்தில் உள்ள உல்பெரியா மக்களவை தொகுதி மற்றும் நோவாபாரா சட்டப்பேரவைத் தொகுதியிலும் பா.ஜ.க படுதோல்வி அடைந்துள்ளது. அங்கு ஆளும் திரிணமூல் காங்கிரஸ் வெற்றி பெற்றுள்ளது.

பாஜக ஆளும் மாநிலத்திலேயே அக்கட்சி தோல்வியைத் தழுவியிருப்பது மோடி அமித்ஷா கூட்டணிக்குப் பேர்ரதிர்ச்சியையும் எதிர்க்கட்சிகளுக்குப் பெரும் உற்சாகத்தையும் கொடுத்துள்ளது.

Leave a Response