வடுகப்பட்டி தாயே! நானும் உன் சேயே! – எச்.ராஜாவை விமர்சிக்கும் அறிவுமதி கவிதை

ஸ்ரீவில்லிபுத்தூரில் சனவரி 7,2018 அன்று ஆண்டாள் குறித்த கருத்தரங்கம் நடைபெற்றது. அதில், வைரமுத்து கலந்து கொண்டு ஆண்டாள் பற்றி பல கருத்துகளைப் பகிர்ந்து கொண்டார். அப்போது, ஆண்டாள் வாழ்ந்த காலம், தெய்வம் மற்றும் கடவுளுக்கிடையே உள்ள வேறுபாடு பற்றி அவர் தெரிவித்த கருத்துகள் அந்த விழாவிற்கு வந்தவர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியது. எனவே, இந்து மதத்தை அவமதித்துவிட்டதாக வைரமுத்திற்கு பாரதீய ஜனதா எச்.ராஜா உள்பட சிலர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

இதைத்தொடர்ந்து ஒரு மேடையில், வைரமுத்துவை மிகக் கேவலமாக எச்.ராஜா பேசியதோடு வைரமுத்து அம்மாவை தாசி என்று மிகச் சாதாரணமாக மேடையில் பேசுகிறார். அந்தக் காணொலி இணையமெங்கும் உலாவருகிறது. இதற்குக் கடும் எதிர்வினைகள் வந்துகொண்டிருக்கின்றன.

இதுகுறித்து பாவலர் அறிவுமதி எழுதியுள்ள கவிதை….

அன்று
சமஸ்கிருதத்தில்
சொன்னார்கள்

வலிக்கவில்லை!

இன்று
தமிழிலேயே
சொல்கிறார்கள்!

வலிக்கவில்லை!

புரிகிறது…
நாமெல்லாம்
தமிழர்கள் இல்லை
ஆம்
சூத்திரர்கள்!

அய்யோ் என் தாயின்
சேலையை உருவி விட்டு
அம்மணமாய்
நடுத் தெருவில்
நிற்க விட்ட
அவமானத்தில்
தவிக்கிறேன்!
தவிக்கிறேன்!

ஆம்
வடுகப்பட்டி
தாயே!
நானும்
உன்
சேயே!

ஆனாலும்
அழும்
கண்ணீரைத்
துடைத்துக் கொண்டே
சொல்கிறேன்
தமிழர்களே!
ஆத்திரப்படுத்தி
அரசியல்
செய்ய முனையும்
உத்தியிது!
ஆண்டாண்டு காலமாய்
நம்மை
அழிக்க நினைப்பவர்களின்
புத்தியிது!

கைபேசிகளின் வெளிச்சத்தில்
தமிழ் அரசியலைப்
பூக்க வைத்த
இளைஞர்களின்
காலமிது!

கர்நாடக இசையைக்
கானா
இசையால்
எதிர் கொள்ளும்
இளைஞர்களின்
காலமிது!

இப்போது நாம்
சிந்திக்க வேண்டியது..
ஒன்றே
ஒன்றுதான்..
நாம்
தாழ்த்தப் பட்டவர்கள்

யாரால்!

நாம்
மிகவும் பிற்படுத்தப் பட்டவர்கள்
யாரால்?

நாம்
பிற்படுத்தப் பட்டவர்கள்
யாரால்?
யாரால்?

பெரியாரின்
அம்பேத்கரின்
அறிவில்……….

சிந்தியுங்கள்!
சிந்தியுங்கள்!

இப்போது சொல்லுங்கள்!
நாம்
தமிழர்களா?
சூத்திரர்களா?
்்்
அறிவுமதி
10.01.18

Leave a Response