உபி உள்ளாட்சித் தேர்தலில் பாஜக வெற்றி பெற்றது எப்படித் தெரியுமா?

உத்தரபிரதேசத்தில் நடந்த உள்ளாட்சித் தேர்தலில் பாஜக வெற்றி பெற்றது எப்படி? என்ற கேள்விக்கான இரண்டு விடைகளைக் காண்போம்……
உத்தரப்பிரதேச உள்ளாட்சித் தேர்தல் முடிவு வாக்குப் பதிவு யந்திரத்தின்மீதான சந்தேகத்தை வலுப்படுத்தியிருக்கிறது.

உபியில் மொத்தமுள்ள 16 மேயர் பதவிகளில் 14 ஐ பாஜகவும் 2 ஐ பகுஜன் சமாஜ் கட்சியும் கைப்பற்றியுள்ளன. ஆனால் 198 நகராட்சிகளில் 68 ஐயும் 438 நகரப் பஞ்சாயத்துகளில் 100 இடங்களையும்தான் பாஜகவால் பிடிக்க முடிந்துள்ளது.

மேயர் தேர்தல் வாக்கு பதிவு யந்திரத்தின் மூலமும் பிற தேர்தல்கள் வாக்கு சீட்டு மூலமும் நடந்துள்ளன. மேயர் தேர்தலும் வாக்கு சீட்டின் அடிப்படையில் நடந்திருந்தால் பாஜக இத்தனை இடங்களை பிடித்திருக்கமுடியாது என்று சமாஜ்வாதி கட்சி கூறுவது சிந்திக்கத்தக்கதாகவே உள்ளது.- ரவிக்குமார், விடுதலைச்சிறுத்தைகள்.

உ.பி உள்ளாட்சி தேர்தல் முடிவுகளும் ஊடகங்களும்.ஒரு பார்வை.
பி.ஜெ.பி பெற்ற வெற்றி:மாநகராட்சி 14,நகராட்சி 67,பஞ்சாயத்து 100.பகுஜன் சமாஜ் பார்ட்டி பெற்ற வெற்றி:மாநகராட்சி 2,நகராட்சி 28,பஞ்சாயத்து 45.
சமாஜ்வாடி பார்ட்டி: மாநகராட்சி இல்லை,நகராட்சி 45,பஞ்சாயத்து 83.
காங்கிரஸ்:மாநகராட்சி இல்லை,நகராட்சி 9,பஞ்சாயத்து 17.
மொத்த மாநகராட்சி 16,நகராட்சி 198,பஞ்சாயத்து 438.சதவீதத்தில் மாநகராட்சி பி ஜெ பி87%,பி எஸ் பி13%,நகராட்சி பி ஜெ பி 32%,மற்றவை 68%,பஞ்சாயத்து பி ஜெ பி 23%,மற்றவை 77%.உ பி யில் நடப்பது B J P ஆட்சி.இந்தியாவில் பார்ப்பனர்கள் அதிக.அளவாக 25% பேர் அங்கு வாழ்கின்றனர்.அனைவரும் மாநகராட்சியில் வாழ்வார்கள் ஆகையால்தான் மாநகராட்சியில் இந்த அளவு வெற்றியினை பெற்றிருக்கின்றனர்.மற்ற பகுதிமுழுவதும் மற்றகட்சிகளே பெருமளவு கைபற்றியுள்ளனர்.ஆனால் ஊடகங்கள் BJP வெற்றி பெற்றதாக செய்தி வெளியிடுகின்றன.தந்தை பெரியாரின் கண்கொண்டு பார்த்தால் தான் உண்மை தெரியும்.இந்த படிப்பினையினை அங்குள்ள அரசியல் கட்சிகள் புரிந்து கொண்டால் 2019 ஆம் ஆண்டு பாராளுமன்ற ்தேர்தலில் தோல்வி உறுதி என்பதற்கு இந்த உள்ளாட்சி தேர்தல் சிறந்த எடுத்துக்காட்டாகும்.

அழகர்சாமி,
திராவிடர் கழக முன்னாள் மாவட்ட செயலாளர்.

Leave a Response