ஒபாமாவிடம் தொடுதிரை கைபேசி (ஸ்மார்ட் போன்) இல்லையாம் மக்களே!

நாட்டில் நண்டுசிண்டுகள் எல்லாம் தொடுதிரைகைபேசியை (ஸ்மார்ட்போன்) வைத்துக்கொண்டு அட்டாகசம் செய்துகொண்டிருக்கின்றன. ஆனால் உலகின் முதல்குடிமகன் என்று சொல்லப்படுகிற அமெரிக்கஅதிபர் ஒபாமாவிடம் சாதாரணகைபேசிதான் இருக்கிறதாம்.
ஏபிசி தொலைக்காட்சிக்கு அவர் பேட்டியளித்தபோது இந்தத்தகவலைத் தெரிவித்திருக்கிறார். அவருடைய பேட்டியில், “நான் யாருக்கும் குறுந்தகவல் அனுப்புவதில்லை, என்னிடம் அதிநவீன வசதிகொண்ட ஸ்மார்ட்போன் இல்லை, ஒரு பினாக்பெரி போன் மட்டுமே இருக்கிறது. ஆனால், என் மகள்கள் ஸ்மார்ட்போன் வைத்திருக்கிறார்கள். அவர்கள் தங்கள் தோழிகளுடனும் நண்பர்களுடனும் தகவல்களைப் பரிமாறிக்கொள்கிறார்கள். நான் பாதுகாப்புக் காரணங்களையொட்டி குறிப்பிட்ட அளவே தொழில்நுட்ப வசதிகளைப் பயன்படுத்துகிறேன். ஒலிப்பதிவு செய்யும் வசதிகளைக் கொண்ட போன்களை பயன்படுத்துவதில்லை என்று சொல்லியிருக்கிறாராம்.
ஒபாமாவின் இந்தப்பேட்டியின் மூலம் நாம் தெரிந்துகொள்வது அதிநவீன வசதிகள் கொண்ட கைபேசிகள் பாதுகாப்பற்றவை என்பதுதான். இது தெரி£யமல்தான் பலர் மாட்டிக்கொள்கிறார்கள்.

Tags:

Leave a Response