‘பிணந்தின்னி அரசியல்’
மாநிலமே கொதிநிலையில் இருக்கின்ற நிலையில், காலையில் நியுஸ்7 தொலைக்காட்சியில் தோழர் Sugitha Sugi நெறியாள்கையில் நீட் / அனிதாவின் மரணம் பற்றி தோழர் அருள்மொழியோடு விவாதம் நடந்தது.
சுஜீதா தொலைபேசியில் பாஜகவின் திரு. எச். ராஜாவிடம் அனிதாவின் தற்கொலையை எப்படிப் பார்க்கிறீர்கள் என்றுக் கேட்கிறார். அதற்கு ராஜாவின் பதில்
“தமிழகத்தின் பிரதான கட்சி ‘பந்து’ எங்கள் கையில் என்று சொன்னது இது தானோ? இவர்களே ஒரு அப்பாவி குழந்தையைக் கொன்று விட்டு அதன் மூலம் அரசியல் ஆதாயம் தேடுகிறார்களோ என்கிற சந்தேகம் எழுகிறது. அம்மாக்களின் பிண நெருப்பில் உணவு சாப்பிடுபவர்கள் இவர்கள்” – என்று பதில் சொல்கிறார்.
தோழர் அருள்மொழி அதை தெளிவாக கையாண்டார்.
பொதுநலனுக்காக தன்னுயிர் நீத்து, கொள்கைகளுக்காக உயிரை மெழுகாய் உருக்கும் கூட்டம் தான் இந்த மண்ணில் இருக்கிறது.
பிண அரசியல் செய்வது எங்கள் மண்ணின் கொள்கையல்ல திரு. ராஜா. அது பாஜக என்கிற எந்த அறநெறியும் இல்லாத கட்சியின், அதன் மூலாதாரமான ஆர்.எஸ்.எஸ்ஸின் கேடுக் கெட்ட யுக்தி.
உங்கள் பிரதமர், முதல்வராய் இருந்த போது கோத்ரா ரயில் எரிப்பின் சவங்களை அகமதாபாத் முழுக்க ஊர்வலமாய் கொண்டு சென்று ஹிந்துத்துவ வெறியாட்டத்தை கிளறி இந்தியா பார்த்திராத கொலைக்களமாக மாற்றியது தான் உங்களுடைய ‘பிண அரசியல்’
அரசு தேர்வுகளில் முறைகேடுகள் நடந்திருக்கிறது என்று சொன்னவுடன், அதை வெளிக்கொண்டு வந்த எல்லோரையும் வரிசையாக தீர்த்துக் கட்டி விட்டு, ஒன்றுமே தெரியாதது போல் ம. பி-யினை ஆண்டுக் கொண்டு இருக்கிறாரே செளகான், அது தான் ‘பிண அரசியல்’
போன மாதத்தில் மட்டும் அரசு மருத்துவமனைகளில் ஆக்சிஜன் பில் தராமல் இறந்த குழந்தைகள் மட்டும் 200ற்றினை தாண்டும். எந்தவிதமான பொறுப்பினையும் ஏற்காமல், தன் சொந்த செலவில் உதவப் போன அரசு மருத்துவரையும் சஸ்பெண்ட் செய்து விட்டு, கிருஷ்ண ஜெயந்தியை கோலகலமாக கொண்டாட வேண்டுமென்று சொன்னாரே உ.பியின் யோகி அத்யானந்த், அது தான் ‘பிணந்தின்னி அரசியல்’.
வெல்ல வேண்டுமென்பதற்காக ஒரு ரேபிஸ்ட், அக்யுஸ்ட் டூபாக்கூர் சாமியாரின் காலில் விழுந்து வணங்கி, வென்று, அந்த சாமியார் செய்த குற்றத்திற்காக தண்டனை வழங்கப்படும் என்று நீதிமன்றம் சொன்னதும், 30க்கும் மேற்பட்ட உயிர்கள் கலவரத்தில் மாண்டப் போதும், கைக்கட்டிக் கொண்டு வேடிக்கைப் பார்த்தாரே ஹரியானாவின் மனோகர் லால் கட்கர் அது தான் பிணந்தின்னி அரசியல் இவ்வாறு சரியான பதிலடி கொடுத்தார் அருள்மொழி.
– பாபுராஜேந்திரன்