பிக்பாஸ் வீட்டுக்கு ஓவியா திரும்ப வராததற்கு இதுதான் காரணமாம்

விஜய் தொலைக்காட்சி நடத்தும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் நடிகை ஓவியா கலந்து கொண்டார். பிக்பாஸ் வீட்டில் இருந்து கடந்த 10 நாட்களுக்கு முன்னர் பிடிக்காமல் வெளியேறினார்.

இந்நிலையில், ஓவியா இருக்கும் வரை விஜய் தொலைக்காட்சியின் டிஆர்பி அதிகமாக இருந்தது. ஓவியா வீட்டை விட்டு வெளியேறியதால் பிக்பாஸ் பார்ப்பதற்குக் கூட ஆளில்லாமல் டிஆர்பி அப்படியே சரிந்தது.

இதனையடுத்து விஜய் டிவி ஓவியாவை மீண்டும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வேண்டும் என அழைத்தது. அப்போது ஓவியா சில நிபந்தனைகளை விதித்ததாகத் தெரிகிறது.

தினமும் ரூ.10 லட்சம் சம்பளமாக வழங்க வேண்டும். மேலும், காயத்ரி, ஆரவ் வீட்டிலிருந்து வெளியேற்ற வேண்டும் அது மட்டுமின்றி தன்னுடன் ஒரு தோழியை அழைத்து வருவதாகவும் அவரையும் வீட்டிற்குள் அனுமதிக்க வேண்டும் என்றெல்லாம் நிபந்தனை விதித்ததாகத் தெரிகிறது.

இதனை கேட்ட பிக்பாஸ் குழுவினர் அதிர்ச்சியடைந்ததாகத் தெரிகிறது. விஜய் தொலைக்காட்சி சார்பில் அவருடைய நிபந்தனைகளை ஏற்றுக்கொண்டு அவரை அழைக்கலாம் என்று நினைப்பதாகச் சொல்லப்படுகிறது.

இதனால்தான் ஓவியா வராமல் இருக்கிறார். அவருடைய நிபந்தனைகளில் சிலவற்றையேனும் ஏற்றுக்கொண்டால் அவர் திரும்பவருவார் என்கிறார்கள்.

Leave a Response