
தனி ஒருவன் படத்தின் வெற்றியை தொடர்ந்து இயக்குனர் மோகன்ராஜா இயக்கத்தில் தற்போது உருவாகி வரும் படம் ‘வேலைக்காரன்.. சிவகார்த்திகேயன்-நயன்தாரா ஜோடியாக நடிக்க, மலையாளத்தில் முன்னணி கதாநாயகர்களில் ஒருவராக விளங்கும் பஹத் பாசில் இந்தப்படத்தில் வில்லனாக நடித்துள்ளார். இவருக்கு ஜோடியாக சினேகா நடித்துள்ளார்.
இன்று பஹத் பாசிலுக்கு பிறந்தநாள். அவர் தற்போது கேரளாவில் ஒரு மலையாள படப்பிடிப்பில் கலந்துகொண்டு நடித்து வருகிறார். ஆனாலும் பஹத் பாசிலுக்கு வாழ்த்து சொல்வதற்காக வேலைக்காரன் படத்தில் பஹத் பாசில் படம் இடம்பெற்ற செகண்ட் லுக் போஸ்டர் டிசைனில் வடிவமைக்கப்பட்ட கேக்கை தயார் செய்து, கேரளாவுக்கே சென்று அவரது பிறந்தநாளை கொண்டாடிவிட்டு வந்துள்ளார் தயாரிப்பாளர் ஆர்டி.ராஜா.


