விஜய்சேதுபதியுடன் இணைந்து நடிக்கும் ஜனகராஜ்..!


தொண்ணூறுகளில் ரஜினி, கமல் உள்பட பல முன்னணி ஹீரோக்கள் படங்களில் காமெடி நடிகராக நடித்து வந்தவர் நடிகர் ஜனகராஜ். கவுண்டமணி—செந்தில் கோலோச்சிய காலத்தில் தனக்கேன் ஒரு தனி பாணியில் நகைச்சுவை நடிப்பில் அசத்தினார் ஜனகராஜ்.. 2007க்குப் பின்னர் அவர் எந்தப் படத்திலும் நடிககவில்லை.

பத்து வருடம் கழித்து தற்போது விஜய்சேதுபதி-த்ரிஷா நடிக்கும் ‘96’ படத்தில் ஒரு முக்கிய கேரக்டரில் நடித்து வருகிறார் விஜய்சேதுபதி, ஜனகராஜ் சம்பந்தப்பட்ட காட்சிகள் சமீபத்தில் படமாக்கப்பட்டன. நடிப்புக்கு 10 வருடங்கள் இடைவெளி விட்டிருந்தாலும் அண்மையில் நடைபெற்ற படப்பிடிப்பில் இயக்குனர் கூறியதை கவனமாக கேட்டு ஒரே டேக்கில் ஓகே செய்து அசத்தி விட்டாராம் நடிகர் ஜனகராஜ்.

Leave a Response