
எடிட் பண்ணி நம்பள கெட்டவங்களா காட்டறாங்களோ – காயத்ரி
இருக்கிறதைதான் காட்டறாங்க – ஓவியா
தானாவே கெட்டப்பேரு வாங்கிக்கிது நம்ம காயத்ரி. டாஸ்க்குல கூட மாட்ட மாட்டேங்கிறாளே ஓவியா – பிக் பாஸ். காயத்ரி கால் நக்கிகள் கட்சி கட்டி தாங்கள் நாமினேட் ஆகாமல் உஷாராய் தப்பித்துக்கொள்கிறார்கள் கூடவே தவறாமல் ஓவியாவை நாமினேட் செய்துவிடுகிறார்கள்.
ஓவியா தவறே செய்திருந்தாலும் மக்கள் காப்பாற்றி விடுவார்கள். ஆனால் நாமினேட் ஆன வாரத்தில் தவறே செய்யாமல் எவ்வளவுதான் எச்சரிக்கையாக இருந்தாலும் பரணிக்கும் ஓவியாவுக்கும் இழைத்த பழைய அநீதிகளுக்காக காயத்ரி கால் நக்கிகளில் யார் மாட்டினாலும் எலிமினேட் செய்யப்படுவார்கள் என்பது இந்த வாரம் ஜூலிக்குக் கிடைக்கும் கல்தா மூலம் அறியப்படும். ஓவியா மெண்ட்டலா மிரட்டலா
ஆரவை ஏன் டார்ச்சர் செய்கிறாள் ஓவியா. அந்த அளவுக்கு உண்மையிலேயே காதல்வயப் பட்டிருக்கிறாளா அல்லது எலிமினேஷன் என்றதும் வந்து ஒட்டிய நாய் அடுத்த வாரம் நாமினேட்டே ஆகாமல் தப்பித்ததும் கனவானாகி எப்படி விலகி ஓடுகிறது பாருங்கள் என, பயந்து அலறுமளவுக்கு விரட்டி விரட்டி அதன் சுயரூபத்தை வெளிச்சமிட்டுக் காட்டுகிறாளா அல்லது மனித உணர்ச்சிகள் பிக் பாஸில் சுவாரஸியத்துக்கான வெறும் டாஸ்க் விளையாட்டு மட்டுமே என்று, தன் எலிமினேஷனையே பணயம் வைத்து அம்பலப்படுத்துகிறாளா.
உண்மையாக நேசித்தவர்கள் அவ்வளவு சுலபத்தில் வெறுப்பதில்லை விட்டு விலகுவதுமில்லை என்கிற, உங்களையும் என்னையும் பற்றிய உண்மை உங்களையும் என்னையும்விட ஓவியாவுக்கு நன்றாகத் தெரியும். சரி. நான் குடுத்ததைத் திருப்பிக் குடு என்று எந்தப் பெண்ணும் கேட்காததைக் கேட்டாள் ஓவியா. எல்லா அசடுகளும் அமைதியாவதைப் போல ஊமையானான் ஆரவ். கேட்கத் துப்பில்லாமல் பரணி விஷயத்தில் மழுப்பிய கமல் போலில்லாமல், நேரடியாய்க் கேட்டு காயத்ரியை செக்மேட் செய்த பிந்து மாதவி பிக் பாஸின் நெ.2


