
‘மெட்ரோ’ படத்தில் நடித்த சிரிஷ் அடுத்தததாக ‘பிஸ்தா என்கிற படத்தில் நடிக்கிறார். படத்தின் கதாநாயகிகளாக சைத்தான் ‘அருந்ததி நாயர் மற்றும் மலையாளத்தில் ‘ஆயாள் ஞானல்ல’ படத்தில் பஹத் பாசில் ஜோடியாக அறிமுகமான மிருதுளா முரளியும் நடிக்க இருக்கிறார்கள்..
காமெடிக்கு முக்கியத்துவம் கொடுத்து உருவாகும் இந்தப்படத்தில் சதீஷ், யோகிபாபு மற்றும் சென்றாயன் என மூன்று நகைச்சுவை நடிகர்கள் நடிக்கவுள்ளனர்.. இந்தப்படத்தை இயக்கம் ரமேஷ் பாரதி வேறு யாருமல்ல, சிரிஷ் நடித்த மெட்ரோ படத்தின் எடிட்டராக பணியாற்றியவர் தான்.. கிராமத்து பின்னணியில் உருவாகும் இந்தப்படத்தின் படப்பிடிப்பை கும்பகோணம் மற்றும் காரைக்குடி பகுதிகளில் நடத்தவுள்ளனர்..
இருபது வருடங்களுக்கு முன் கே.எஸ்.ரவிக்குமார்-கார்த்திக் கூட்டணியில் ‘பிஸ்தா’ என்கிற பெயரில் ஒரு படம் வெளியானது குறிப்பிடத்தக்கது. .


