ஓவியாவுக்கு எம்ஜிஆர் ராஜீவ் போன்ற முகராசி

பிக் பாஸ் வீட்டில் இருப்பவர்களில் புத்திசாலிகள், பார்வையாளர் கருத்தை யூகித்துத் தங்கள் இமேஜ் ரொம்ப டேமேஜ் ஆகிவிடும் என சண்டை போடுவதைத் தவிர்த்து நல்லவர்களாக நடிக்க முயல, நிகழ்ச்சி மொக்கை ஆகத் தொடங்கி விட்டது. சுவாரசியம் குறைகிறதே என்று பிக் பாஸே உள்ளே புகுந்து டாஸ்க் என்கிற பெயரில் அவர்களுக்கிடையில் சண்டையை வலிந்து உருவாக்கத் தொடங்கியிருப்பது டப்பிங் சீரியல் பார்க்கிற உணர்வைத் தர ஆரம்பித்திருக்கிறது. ஓவியாவுக்காக சிரமப்பட்டு சகித்துக்கொள்பவர்களில் என்னைப் போன்ற பலரையும் சமூக அக்கறை பீய்ச்சியடிக்க போங்கடாங்… என திட்டவைத்து அநேகமாக இந்த சனி ஞாயிரோடு எவிக்ட் ஆக வைத்துவிடுவார்கள்

கொலை முயற்சி டாஸ்க் கொடுத்து ஓவியாவை வில்லியாக்க பிக் பாஸ் பிளான் பண்ணினாலும்கூட பரிதாபத்துக்குரிய பல்லியாகக்கூட ஆக்கமுடியாது ஜூலியை. ஓவியா மனமார அழுதும் ஜூலி வாயார கருவியும் பிக் பாஸின் ஸ்கிரிப்ட்டை பெப்பெரப்பே ஆக்கிவிடுவார்கள் எச்சரிக்கை‬கொலை முயற்சி டாஸ்க் கொடுத்து ஓவியாவை வில்லியாக்க பிக் பாஸ் பிளான் பண்ணினாலும்கூட பரிதாபத்துக்குரிய பல்லியாகக்கூட ஆக்கமுடியாது ஜூலியை. ஓவியா மனமார அழுதும் ஜூலி வாயார கருவியும் பிக் பாஸின் ஸ்கிரிப்ட்டை பெப்பெரப்பே ஆக்கிவிடுவார்கள் எச்சரிக்கை‬

ஓவியாவுக்கு எம்ஜிஆர் ராஜீவ் போன்ற முகராசி. கொலையே செய்திருந்தாலும் முதலில் அவர்கள் செய்திருக்கவே மாட்டார்கள் என நம்புவார்கள். ஆதாரபூர்வமாய் நிரூபிக்கப்பட்ட பின், ஏன் அவர்கள் அப்படிக் கொலை செய்ய நேர்ந்தது என யோசித்து தங்களுக்குத் தாங்களே ஆறுதல் சொல்லிக்கொள்வார்கள் சாதாரண மக்கள். ஓவியா இன்னும் ஒரு படி மேலே. இணையத்தையும் சேர்த்து வளைத்துப் போட்டிருக்கிறாள். ‬
‪ஜூலி காயத்ரி சினேகனெல்லாம் கருணாநிதி மோடி மாதிரி -வாழ்வும் தாழ்வும் வாயாலேயே

-– விமலாதித்தமாமல்லன்

Leave a Response