பிக்பாஸ் போன்ற கேவலமான நிகழ்ச்சியில் தோன்றுவது ஏன்? – கமலை உலுக்கும் கேள்வி

பிக் பாஸ் என்பது பிக் வேஸ்ட். சுமார் 100 கோடி செலவில் 1000 கோடிகளை அள்ளும் ஒரு கேம்பிளிங் ஷோ! இதைப் பற்றி பேசினாலும்,எழுதினாலும் ஏதோ ஒரு வகையில் நாமும் இந்த கேம்பிளிங்கிற்கு துணை போனதாகிவிடுமே என்ற பயத்தில் தான் இத்தனை நாளும் அலட்ச்சியம் செய்து வந்தேன்.

யதேச்சையாக ஒரு செய்தி கவனத்திற்கு
வந்தது.இந்த ஷோ வில் சென்றாயன் என்ற நடிகர்,”னான் தியேட்டரில் பிளாக்கில் டிக்கெட்
வித்தவன்” என்று சொல்லப் போக,அதற்கு கமல ஹாசன்,” நான் பிளாக்கில் டிக்கெட் வாங்கிய பழக்கமில்லாதவன்” என்றாராம்.

அடடா, புல்லரித்துவிட்டது! என்னே ஒரு நேர்மை!
கமல் அவர்களே, சென்றாயனாவது பிளாக்கில் டிக்கெட் வித்தார், ஆனால் நீங்களோ, உங்கள் படம் வெளிவரும் போது, எல்லாதியேட்டர்காரகளையும் அல்லவா பிளாக்கில் டிக்கெட் விற்க வைக்கிறீர்கள்!

சரி, இது வரை நடந்தததை விட்டு விடுவோம்,இப்ப நீங்களொரு அரசியல் கட்சி தலைவராகிவிட்டீர்கள்,இனி வெளிவருகின்ற
உங்கள் படங்களுக்காவது நியாயமான டிக்கெட் கட்டணம் மட்டும் தான் வசூலிக்கப்படும் என்று உத்திரவாதம் கொடுப்பீர்களா?

அது சரி,மக்கள் தலைவராக அவதாரம் எடுக்க விரும்பும் நீங்கள், இது போன்ற மகா கேவலமான தொலைக்காட்சி நிகழ்ச்சியில் தான் தோன்ற வேண்டுமா?

உங்களை விட வயதில்
சிறிய,ஆனால் உங்களைப் போல் அடுத்த முதலமைச்சருக்கு ஆசைப் படாத ஆமிர்கானால் எப்படி” சத்திய மேவ ஜெயதே”
என்ற அற்புதமான நிகழ்ச்சியை தர முடிந்தது?மிக நல்ல படங்களை தயாரிக்க முடிகிறது?

– சாவித்திரி கண்ணன்

Leave a Response