ஓவியாவிடம் நேர்மை தரும் தன்னம்பிக்கை, துணிவு அதிகம்

ஓவியா சின்ன உடை அணிந்தாலும் ஆபாசமில்லை என்று உணர்த்தியிருக்கிறார்.

சக ஆண்களோட கம்பர்டபிளாக கண்ணியமுடன் பழகுவது, ஒரு ஆண் சரியாகப் பேசாவிட்டாலே முகத்தைத் தூக்கிக் கொள்ளும் நாம் நன்றாக நெருக்கமாய் பழகி காதலை நிராகரித்தவுடன் நட்பு பாராட்டல்..ஓட்டு கேட்டல்..

நள்ளிரவில் நான்கு ஆண்களுடன் தனியே இருப்பினும் அதை அழகாகப் பாலின வேறுபாடு உறுத்தல் இல்லாமல் செய்து இருப்பவர்

அதே சமயத்தில் ஆறுதல் எனும் பெயரில் வரும் கட்டிப்பிடி வைத்தியத்தை கவனமாகத் தவிர்ப்பவர்.

எந்தத் தொடுகை சரி என்று தெரிந்திருக்கு.. இந்த எச்சரிக்கை உணர்வு அனைத்துப் பெண்களிடமும் இயல்பானது..தன் உடையால் யாரும் அட்வாண்டேஜ் எடுத்துக்கொள்ள விடுவதில்லை .அதே சமயத்தில் தன் தேர்வில் உறுதியாக உள்ளார்

சுய உணர்வு ஆண்களுக்கு அதிகம் உண்டு. அவர்களின் எக்ஸ்போஷர் அப்படி .தன்னை எங்கே எப்படி வெளிப்படுத்திகொள்ள வேண்டும் என்பதன் தெளிவு .அதே சமயத்தில் தன் இயல்பு மாறாமல்..அது இவர் கற்றுக்கொண்டு இருக்கிறார்..நல்ல குணங்களைக் கற்றுக்கொள்ளும் இயல்பு இருக்கிறது .அது பெரிய பிளஸ் பாயிண்ட் .

நேர்மை தரும் தன்னம்பிக்கை, துணிவு அதிகம்..அத்தனை பேரும் வேண்டும் என்று மனம் சொன்னாலும் காம்ப்ரமைஸ் ஆகாமல் தான் செய்தது செய்வது நேர்மையானது என்ற தைரியம்.

ஆளுமை உள்ள பலரின் ஒரு குணம்..தன்னில் கவனம் உண்டு .எட்டு மணிக்குள் எழுந்து காபி குடித்து உடை அணிந்து, மேக்கப் போட்டு காமிரா முன் ஆடும் நளினமான ஆட்டம் ..அதில் டான்ஸ் மாஸ்டரையே மிஞ்சும் அளவுக்கு.

தனக்கு எது நன்றாக வரும் என்று தெரிந்து அதைச் சரியான நேரத்தில் வெளிப்படுத்துகிறார்..அடுத்தவரின் திறமையை ஊக்குவிக்கிறார்..ஜூலியை பாட சொல்லியதும் இதனால்தான்.

எங்கள் வீட்டில் ஒரு சொந்தம் காபி போட்டதிற்கு, போனேனா, தண்ணி எடுத்தேனா, பால் பாக்கேட் கட் செய்தேனா என்று அரை மணி பேசுவார்.சிலர் அங்கும் இங்கும் ஓடி வேலை செய்வது போலக் காட்டுவர்.இவை இல்லாமல் வேகமாக தனக்கு ஒதுக்கப்பட்ட வேலையை முடித்துட்டு ஜாலியாக இருக்கார். கிச்சனில் அரை மணியில் வேலை முடிக்கும் பெண்களுக்கு இது புரியும்..இந்த அலட்டிக்கொள்ளாத குணம் அழகு.

உணர்வுகளின் கலவைதான் மனிதன்.பெண்கள் பெரும்பாலும் காயத்ரி வகையறா.டக் என்று எமோஷனை கொட்டி விடுவார்கள்.அதே சமயம் அழுகையும் உண்டு .இது இரண்டையும் தவிர்த்து எமோஷனல் இண்டலிஜண்ஸ் அதிகமாக இருக்கு.
வெற்றியாளர்களுக்கு திறமையை விட IQ ஐ விட EQ மிக முக்கியம்..பெண்களின் வீக்னஸ் இது..இதை முறியெடித்து இருப்பதே சாதனை.

பேச்சில் புறம் பேசா கண்ணியம் பெரும் விஷயம்…அதே சமயம் வார்த்தைகளை கோபத்தில் விட்டு விடுவதில்லை..பெரும்பாலும் குறைகளைச் சுட்டிக்காட்டுகிறார் தவிர குறை சொல்லும் பேச்சு இல்லை.

காதலை நிராகரித்தால் பெரும் கோபம் , வருத்தம் வரும்..Its OK என்று நண்பனாய் மீண்டும் தானே இணைவது பெரும் மனம். அது அத்தனை எளிதல்ல.. நட்புகளையே சிறு பிசகலில் வெளியேற்றும் நாம் இது போன்ற விஷயங்களில் எளிதாய் செல்வது எளிதல்ல..பிரிந்தாலும், புறக்கணித்தாலும், ஏற்றுக்கொள்ளாவிடிலும் its OK என்று எளிதாய் கடந்து செல்லும் மனம் அனைவருக்கும் தேவை..

எங்கு அன்பாக இருக்கனும், எங்கு ஆறுதலாய் பேசனும், எங்கு உடையலாம், எங்கு உறுதி என்பதில் இயல்பாய் இருக்கிறார்.உணர்வுகள் இல்லாவிடில் மனிதம் இல்லை..கோபத்தையும் அழகாய் வெளிப்படுத்துவது ஆசிர்வதிக்கப்பட்ட குணம்.

மாடர்ன் பெண்கள் இப்படி, பக்தியாய் இல்லாவிடில் இப்படி என்று பலவித கற்பிதங்கள் சமூகத்தில் உள்ளது..அத்தனையும் முறியடித்து தன்னை விரும்ப வைக்கும் பெண்ணாக உயர்ந்து நிற்கிறாள். மாடர்ன் என்பது மனதிலும் என்று உணர்த்தி உள்ளார்.

ஆண் கை ஓங்கும் பொழுது துணிந்து நிற்கும் அவ்வுறுதி போதும் ஓவியா…இது இல்லாத சமூகம்தான் அடிமைப்பட்டு இருக்கு..

தவறென்றால் மன்னிப்பு கேட்பதும்..மன்னிப்பு கேட்டால் ஏற்றுக்கொள்வதும் மிக அழகு..இது இல்லாவிடில் சமூகம் இல்லை.
ஆணோ பெண்ணோ தன்னை தன் உடலை நேசிக்க வேண்டும், பராமரிக்க வேண்டும் அதிலும் மிகத்தெளிவாகவே இருக்கிறார்
யாரும் யாரையும் மகிழ்வாக வைக்க மாட்டார்கள் .தங்கள் மகிழ்விற்கே அடுத்தவர்களை நாடுவார்கள் இது தெளிவாக தெரிந்து தன்னை மகிழ்வாக வைத்து உள்ளார்.

ஆக மொத்தம் ஒரு பெண்ணாக..கிட்டத்தட்ட பெமினிசம் பேசாமல் வாழும் பெண்ணாக ஓவியா இருப்பதால் இன்னும் பிடிக்கிறது.

-கிருத்திகாதரன்

Leave a Response