விடுதலைப்புலிகள் மீதான தடையை இந்தியாவும் நீக்கவேண்டும்-பழ.நெடுமாறன்


விடுதலைப் புலிகள் மீதான தடையை இந்தியாவும் நீக்கவேண்டும் – பழ.நெடுமாறன்.!

விடுதலைப் புலிகள் இயக்கம் மீது விதிக்கப்பட்டிருந்த தடையை ஐரோப்பிய ஒன்றியம் விலக்கிக் கொண்டதை வரவேற்கிறேன். இலங்கை அரசு விடுதலைப் புலிகள் இயக்கத்தை ஒரு பயங்கரவாத இயக்கம் என பொய்யான பழியைச் சுமத்தி, வற்புறுத்தியதன் விளைவாகத்தான் ஐரோப்பிய ஒன்றியம் இந்தத் தடையை விதித்தது.

இப்போது இந்த தடை நீக்கப்பட்டதின் மூலம் விடுதலைப்புலிகள் இயக்கம் பயங்கரவாத இயக்கம் அல்ல அது ஒரு விடுதலைப் போராட்ட இயக்கம் என்று ஐரோப்பிய ஒன்றியத்தால் ஏற்கப்பட்டுவிட்டது.

எனவே, உலக நாடுகள் குறிப்பாக இந்திய அரசு விடுதலைப் புலிகள் மீது விதித்துள்ள தடையை உடனடியாக விலக்க முன்வரவேண்டும் என வற்புறுத்துகிறேன். இந்த தடை நீக்கப்படுவதின் மூலம் இலங்கையில் பல்வேறு கொடுமைகளுக்கு ஆளாகித் தவிக்கும் ஈழத் தமிழர்களுக்கு புதிய நம்பிக்கையும் விடிவும் பிறக்கும் என நம்புகிறேன்.

Leave a Response