சிரிக்க சிரிக்க பேசும் காமெடி நடிகர் நிஜ வாழ்க்கையில் வில்லன்..!


விஜய்யுடன் இணைந்து அவரது நண்பராக பல படங்களில் நடித்தவர் நகைச்சுவை நடிகர் தாடி பாலாஜி. இப்போது சில வருட காலமாக இவர் தற்போது தனியார் தொலைக்காட்சி நகைச்சுவை நிகழ்ச்சியில் நடுவராக பணியாற்றி வருகிறார். கொளத்தூரில் வசிக்கும் இவருக்கு நித்யா (30) என்ற மனைவியும் ஒரு மகளும் உள்ளனர்.

சில நாட்களுக்கு முன் நித்யா போலீஸ் கமி‌ஷனர் அலுவலகத்தில் எனது கணவருக்கு குடிப்பழக்கம் உண்டு. குடித்துவிட்டு வந்து என்னை சித்ரவதை செய்கிறார் என கணவர் மீது பரபரப்பு புகார் கொடுத்தார். தற்போது கமி‌ஷனர் உத்தரவின் பேரில் நித்யாவின் புகார் மாதவரம் போலீசுக்கு மாற்றப்பட்டது.

அதன் பேரில் போலீசார் தாடி பாலாஜி மீது, பெண் வன்கொடுமை சட்டம், ஆபாசமாக திட்டுதல், தகாத வார்த்தைகளால் தரக்குறைவாக பேசுதல், கொலை மிரட்டல், ஆபத்து ஏற்படுத்தும் வகையில் தாக்கியது என 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

Leave a Response