கமல்ஹாசனை ஒருநாள் முதல்வராக்குங்கள் – கேரள இயக்குநர் கோரிக்கை

மோடி அரசின் பொருட்கள் மற்றும் சேவை வரி 28 விழுக்காடு, அதோடு தமிழக அரசின் கேளிக்கைவரி 30 விழுக்காடு ஆக மொத்தம் 58 விழுக்காடு. 100 ரூபாயில் 58 ரூபாயை வரியாகக் கட்டவேண்டும் என்பதால் கொதித்தெழுந்த திரையரங்கு உரிமையாளர்கள் (ஜூலை 3,4) இரண்டுநாட்களாக வேலைநிறுத்தம் செய்துவருகின்றனர். அதோடு அர்சுடன் பேச்சுவார்த்தையும் நடத்திவருகிறார்கள்.

இந்நிலையில், தமிழில் நேரம் மலையாளத்தில் பிரேமம் ஆகிய படங்களை இயக்கிப் புகழ்பெற்ற இயக்குநர் அல்போன்ஸ்புத்திரன், தன்னுடைய முகநூலில்,

முதல்வன் படம் போல் வாய்ப்பு இருந்தால் தமிழ்நாட்டிற்கு கமல்ஹாசன் அவர்களை ஒருநாள் முதலமைச்சராகப் போடலாம்.
அவருடைய தொலைநோக்கு பார்வையால் தமிழ்நாட்டை அடுத்த நிலைக்கு உயர்த்திச் செல்வார். விரைவில் இது நடக்கும் என்று நம்புகிறேன். இது என்னுடைய விருப்பம், தவறாகக் கூறியிருந்தால் மன்னித்துவிடுங்கள் என்று கூறியுள்ளார்.

ஏற்கெனவே திரைத்துரையினர் மீதான கோபம் காரணமாகத்தான் வரிவிதிப்பு கடுமையாகியிருக்கிறது என்று சொல்லிக்கொண்டிருக்கும் வேளையில் எரிகிற தீயில் எண்ணெய் ஊற்றியிருக்கிறார் அல்போன்ஸ்புத்திரன்.

Leave a Response