
தற்போது விக்னேஷ் சிவன் இயக்கத்தில் ‘தானா சேர்ந்த கூட்டம்’ என்கிற படத்தில் நடித்து வருகிறார் சூர்யா.இந்தப்படம் முடிவடைந்ததுமே அடுத்ததாக ‘இறுதிச்சுற்று’ படத்தை இயக்கிய சுதா கொங்கரா டைரக்சனில் புதிய படம் ஒன்றில் நடிக்க உள்ளாராம் சூர்யா.
இந்தப்படத்தில் சூர்யா பைலட் ஆக நடிக்கிறார் என்று சொல்லப்படுகிறது. இந்தபடத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறாராம். அப்படியானால் இதுவே சூர்யாவும் ஜி.வி.பிரகாஷும் இணைவது முதன்முறையாக இருக்கும்.


