‘மாட்டிறைச்சி தடை’ குறித்து மத்திய அரசுக்கு அரவிந்த்சாமி நையாண்டி கேள்வி..!


கடந்த சில நாட்களுக்கு முன் மத்திய அரசு அறிவித்த ‘மாட்டிறைச்சி தடை’ பற்றி கமல் மற்றும் நடிகர் சித்தார்த் என விரல்விட்டு எண்ணக்கூடிய அளவில் தான் திரையுலகில் இருந்து எதிர்ப்பு குரல் கொடுத்துள்ளார்கள்… தற்போது நடிகர் அரவிந்த்சாமியும் இந்த மாட்டிறைச்சி தடை குறித்து தனது எதிர்ப்பை நையாண்டியுடன் தெரிவித்துள்ளார்..

“ஊட்டச்சத்து குறைபாட்டினால் குழந்தைகள் சிரமப்படும் நாடுகளின் பட்டயலில் இந்தியா டாப் ரேங்கில் ஒன்றாக இருக்கிறது.. அதாவது உலகத்தில் பட்டினியால் வாடுவோர் பட்டியலில் 67/80 என்கிற இடத்தில் இருப்பதாக சொல்லப்படுகிறது. ஒருவரது மேஜையில் இருந்து உணவுகளை எடுப்பதற்கு காரணங்களை கண்டுபிடிக்கிறோம்.. அதே செயல்பாட்டை அவர்களுக்கு ஆரோக்கியமான உணவை வழங்குவதிலும் காட்டவேண்டும்.. இதுதான் அனைத்து மதத்தினரின் விருப்பமாக இருக்கும்” என கூறியுள்ளார் அரவிந்த்சாமி.

Leave a Response