மரம் நடுவதில் போட்டிபோட்டு செயலாற்றும் மலையாள நடிகர்கள்..!


புவி வெப்பமயமாதலில் இருந்து தங்களது மாநிலத்தை காப்பாற்ற கேரள அரசு மாநிலம் முழுவதும் ஒரு கோடி மரக்கன்றுகளை நடும் திட்டத்தை துவங்கி வைத்துள்ளது.. சமூக மற்றும் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் தவிர திரையுலக பிரபலங்களும் இந்த மரம் நடுதல் நிகழ்ச்சியில் ஆர்வமுடன் இறங்கியுள்ளனர்..

மலையாள சூப்பர்ஸ்டார் மோகன்லால் தான் தற்போது நடித்துவரும் படத்தின் படப்பிடிப்பு நடைபெறும் கல்லூரி வளாகத்திலேயே மரம் நடும் பணியை துவக்கி வைத்தார்.. இன்னொரு பக்கம் மெகாஸ்டார் மம்முட்டியும் மரம் நடும் பணிகளில் ஆர்வம் காட்டி களத்தில் இறங்கியுள்ளார்.. குறிப்பாக பள்ளி மாணவிகளுடன் மரம் நடும் பணியில் இறங்கிய அவர் மரம் நடுதலின் அவசியத்தையும் சுற்றுப்புற சூழலை பாதுகாக்க வேண்டியதன் விழிப்புணர்வையும் விளக்கினார்.

இங்கே நடிகர் விவேக் தவிர மரம் நடுவதன் அவசியத்தை வேறு எந்த நடிகரும் வலியுறுத்துவதாக தெரியவில்லை.

Leave a Response