
‘தெறி’ படத்தை தொடர்ந்து மீண்டும் விஜய்யை வைத்து ‘விஜய் 61’ படத்தை இயக்கி வருகிறார் அட்லீ. இதில் சமந்தா, காஜல் அகர்வால் மற்றும் நித்யா மேனன் என மூன்று கதாநாயகிகள் நடித்து வருகின்றனர். இந்தப்படத்தில் விஜய் மூன்று வேடங்களில் நடிக்கிறார் என்பது ஏற்கனவே தெரிந்த விஷயம் தான். இந்நிலையில் பஞ்சாயத்து தலைவர், டாக்டர் மற்றும் மந்திரவாதி ஆகியவை தான் அந்த மூன்று வேடங்கள் என தற்போது புதிய தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதில் மந்திரவாதி தொடர்பான காட்சிகள், முழுக்க நகைச்சுவை அம்சங்களுடன், குழந்தைகளை கவரும் வகையிலும் உருவாக்கப்பட உள்ளதாகவும் கூறப்படுகிறது. சமீபத்தில் சமூக வலைத்தளங்களில் வெளியான முறுக்கு மீசை வைத்த விஜய் கெட் அப், பஞ்சாயத்து தலைவர் வேடத்திற்கானது என தெரியவந்துள்ளது


