
புதிய இயக்குனர்களின் திறமையை கண்டறிந்து அவர்களுக்கு படம் இயக்க வாய்ப்பு வழங்கி வருகிறது பொடென்ஷியல் நிறுவனம்.. ஏற்கனவே மாயா, மாநகரம் என சூப்பர்ஹிட் படங்களை கொடுத்த இந்த நிறுவனம் அடுத்ததாகவும் ‘மாநகரம்’ படத்தின் இயக்குனர் லோகேஷ் கனகராஜை வைத்தே புதிய படத்தை தயாரிக்க இருப்பதாக சொல்லப்பட்டு வந்தது..
இந்த நிலையில் இயக்குனர் ஹரியிடம் உதவி இயக்குனராக பணியாற்றிய கணேஷ் என்பவர் பொடென்ஷியல் நிறுவனத்திற்கு படம் இயக்கவுள்ளதாக சொல்லப்படுகிறது.. இந்தப்படத்திற்கு ‘கண்ணி வெடி’ என டைட்டில் வைக்கப்பட்டுள்ளதாகவும் ‘வில் அம்பு’ படத்தில் நடித்த ஹரீஷ் கல்யாண் இந்தப்படத்தில் கதாநாயகனாக நடிக்க இருப்பதாகவும் சொல்லப்படுகிறது.


