மாநகரம் இயக்குனருக்கு சூர்யா படம் இயக்கும் வாய்ப்பு..!


சூர்யாவின் அடுத்த படத்தை ‘மாநகரம்’ படத்தை இயக்கிய லோகேஷ் கனகராஜ் இயக்கவுள்ளார். சூர்யா தற்போது விக்னேஷ் சிவன் இயக்கத்தில் ‘தானா சேர்ந்த கூட்டம்’ படத்தில் நடித்து வருகிறார். இந்தப்படத்தின் அனைத்துப் பணிகளும் முடிந்துவிட்டன. படத்தை பொங்கலுக்கு வெளியிட படக்குழு முடிவு செய்துள்ளது. இது, சூர்யாவின் 35வது படம்.

அடுத்ததாக சூர்யாவின் 36வது படத்தை, செல்வராகவன் இயக்கப் போகிறார். இந்தப் படத்தில் சூர்யா ஜோடியாக ரகுல் ப்ரீத்சிங் நடிக்கலாம் என்கிறார்கள். இந்நிலையில், சூர்யாவின் 37வது படத்தை யார் இயக்கப் போகிறார் என்ற கேள்வி நீடித்து வந்தது. தற்போது அதற்கு விடை கிடைத்துள்ளது.

Leave a Response