
சிவகார்த்திகேயன், கீர்த்திசுரேஷ் நடித்துள்ள ரெமோ படம் தமிழில் நல்ல வசூலையும் சிவகார்த்திகேயனுக்கு ஒரு ஹிட்டையும் கொடுத்தது. பின்னர் தெலுங்கிலும் வெளியாகி அங்கும் பெரியவெற்றி பெற்று சிவகார்த்திகேயனுக்கு எண்ட்ரி கொடுத்துள்ளது.
தற்போது ரெமோ இந்தியில் ரீமேக் ஆக இருக்கிறது. படத்தை தயாரித்த 24ஏஎம் ஸ்டூடியோ, ஆர்.டி.ராஜாவிடம் பல முன்னணி இந்தி தயாரிப்பு நிறுவனங்கள் ரீமேக் உரிமத்தை கேட்டிருக்கிறது.
ஆனால் யாருக்கும் இதுவரை கொடுக்கவில்லை. 24 ஏஎம் ஸ்டூடியோவை தயாரிக்கும் யோசனையில் இருப்பதாக கூறப்படுகிறது. இந்தியில் படத்தை பி.சி.ஸ்ரீராம் இயக்கி ஒளிப்பதிவு செய்யலாம் என்றும் தெரிகிறது. இதற்கான பேச்சு வார்த்தை நடந்து வருகிறது. சிவகார்த்திகேயன் நடித்த கேரக்டரில் முன்னணி நடிகர் நடிக்கலாம் என்றும் தெரிகிறது.


