
‘ஆரண்யகாண்டம்’ என்கிற ஒரே ஒரு படத்தை மட்டும் இயக்கிவிட்டு, இன்றுவரை தமிழ்சினிமா ரசிகர்கள் அனைவரையும் அந்தப்படத்தை பற்றி சிலாகித்து பேசவைத்த பெருமைக்கு சொந்தக்காரர் தான் இயக்குனர் தியாகராஜன் குமாரராஜா. ஒரு மிகப்பெரிய இடைவெளிக்கு பிறகு இவர் அடுத்ததாக விஜய்சேதுபதி நடிக்கும் படத்தை இயக்கவுள்ளதாக தெரிகிறது..
அதுமட்டுமல்ல, மலையாள நடிகர் பஹத் பாசிலையும் இவருடன் இணைத்து டபுள் ஹீரோ சப்ஜெக்ட்டாக உருவாக்க இருக்கிறாராம் குமாரராஜா. இந்த விஷயங்கள் கிட்டத்தட்ட பேச்சளவிலேயே இருக்கிறது என்று குமாரராஜா சொன்னாலும் கூட, இந்தக்கூட்டணி எப்படியும் இறுதியாகிவிடும் என்றே சொல்கிறார்கள். வரும் 2017ல் இந்தப்படத்தின் படப்பிடிப்பு துவங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


