
பிலிப்பைன்ஸ் நாட்டில் 9-ந் தேதி அதிபர் தேர்தல் நடந்தது. இந்தத் தேர்தலில்ரோட்ரிகோ டியூடெர்டோ, ஜெஜோமர் பினாய், மிரியம் டிபன்சர் சாண்டியாகோ,கிரேஸ் போ, மார் ரோக்சாஸ் ஆகிய 5 பேர் போட்டியிட்டனர்.
இந்த தேர்தலில் மொத்த வாக்காளர்கள் எண்ணிக்கை 5 கோடியே 40 லட்சம்ஆகும். இதில் சாதனை அளவாக 81 சதவீதம் வாக்காளர்கள் ஓட்டுப்போட்டனர்.
இதில், பி.டி.பி. லப்பான் கட்சி சார்பில் போட்டியிட்ட ரோட்ரிகோ டியூடெர்டோ(வயது 71) வெற்றி பெற்று விட்டதாக மணிலாவில் இருந்து வரும் தகவல்கள்கூறுகின்றன. இவர் குற்றங்களுக்கு எதிரானவர். ஆனால் சர்ச்சைக்குரியவர்.தனக்கு அடுத்தபடியாக வந்துள்ள வேட்பாளரை அவர் 2 மடங்கு ஓட்டுவித்தியாசத்தில் தோற்கடித்து விட்டதாக தகவல்கள் கூறுகின்றன. 90சதவீதத்துக்கும் அதிகமான ஓட்டுகள் எண்ணப்பட்டதில் இவர் 1 கோடியே 48லட்சத்துக்கும் அதிகமான ஓட்டுகளைப் பெற்றிருக்கிறார். அவருக்குஅடுத்தபடியாக வந்துள்ள மார் ரோக்சாஸ் 86 லட்சம் ஓட்டுகள் பெற்றுள்ளார்.
இதனால் ரோக்சாஸ் தனது தோல்வியை ஒப்புக்கொண்டார். இதுபற்றி அவர்குறிப்பிடும்போது, “ பலர் அழுதுகொண்டிருக்கிறார்கள். இது கண்ணீர்சிந்துவதற்கான நேரம் அல்ல என்று சொல்லிக்கொள்ள விரும்புகிறேன். நமதுநாட்டுக்காக நாம் அமைதியான முறையில் அதிகார மாற்றத்துக்கு உதவவேண்டும்” என கூறினார்.
மற்றொரு முக்கிய வேட்பாளராக திகழ்ந்த கிரேஸ் போவும் தனதுதோல்வியை ஒப்புக்கொண்டார். வெற்றி பெற்றுள்ள ரோட்ரிகோ டியூடெர்டோ,தவோ நகர மேயர் ஆவார். அங்கு தனது அதிரடி நடவடிக்கைகளால்குற்றங்களை ஒழித்தவர் என்ற பெயர் பெற்றவர்.
தற்போதைய அரசின் மேல் மட்டத்தில் உள்ளவர்கள் மீது கொண்டஅதிருப்தியாலும், ‘குற்றங்களை ஒழித்து விடுவேன், ஊழல் அதிகாரிகளுக்குமுடிவுகட்டுவேன்’ என்று அளித்த வாக்குறுதிகளாலும், மக்கள் பெருவாரியாகவாக்களித்து ரோட்ரிகோ டியூடெர்டோவை தேர்ந்தெடுத்துவிட்டதாகக்கூறப்படுகிறது.
அதே நேரத்தில் தவோ நகரில் நூற்றுக்கணக்கான கிரிமினல்களை போலீஸ்துணையுடன் சுட்டுக்கொன்றதையே பிலிப்பைன்ஸ் முழுவதும் செய்வார் என்றவிமர்சனமும் எழுந்துள்ளது.
ஆட்சி முறையில் மாற்றம்இதற்கிடையே இவர் ஆட்சி முறையில் மாற்றங்களைகொண்டு வரப்போகிறார் எனவும் தகவல் வெளியாகி உள்ளது.
இது குறித்து ரோட்ரிகோவின் செய்தி தொடர்பாளர் பீட்டர் லேவினாகூறுகையில், “ புதிய அதிபர் அரசியல் சட்டத்தை மாற்றி அமைக்க தேசியஅளவில் கருத்து கோருவார். அமெரிக்க அதிபர் முறையிலான ஆட்சிமுறைக்கு பதிலாக பாராளுமன்ற ஜனநாயகத்தையும், கூட்டாட்சிமுறையையும் கொண்டு வருவதற்கு இது உதவும்” என குறிப்பிட்டார்.
பிலிப்பைன்ஸில் இப்படி நடந்திருக்கிறது. இதைத்தொடர்ந்து அமெரிக்காவிலும் அதிபர் தேர்தல் நடைபெற உள்ளது. அத்தேர்தலில் ஹிலாரிகிளிண்டன், டொனால்ட் டிரம்ப் ஆகியோர் போட்டியிடுகிறார்கள்.
இவர்களில் டொனால்ட் வெற்றி பெற வாய்ப்பிருப்பதாகச் சொல்லப்படுகிறது. பிலிப்பைன்ஸ் அதிபர் போலவே இவர் குறித்தும் பல விமர்சனங்கள் உள்ளன. அண்மையில் பதவியேற்ற இலண்டன் மேயருக்கு அவர் சொன்ன வாழ்த்தைப் பாருங்கள்…. இலண்டன் நகரின் முதல் முஸ்லிம் மேயராக சாதிக்கான் தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பது மிகவும் நல்ல விஷயம். எனக்கு அதில் மகிழ்ச்சி. அவர் தனது பொறுப்புகளை நல்ல முறையில் செய்வார் என எதிர்பார்க்கிறேன். மற்றவர்களுக்கு அவர் ஒரு சிறந்த முன்னுதாரணமாக இருப்பார் என நினைக்கிறேன். அமெரிக்காவுக்குள் நுழைய முஸ்லிம்களுக்கு தற்காலிகத் தடை விதிக்கப்படும் என நான் கூறியிருந்தாலும் இலண்டன் மேயருக்கு மட்டும் விலக்கு அளிப்பேன். எல்லா விஷயங்களிலும் விதிவிலக்கு இருக்கும்தானே. அப்படித்தான் இலண்டன் மேயருக்கு அமெரிக்காவுக்குள் நுழைய அனுமதி அளிப்பதும் என்றார்.
இவர் வெற்றி பெற்றால் அமெரிக்காவுக்குள் முஸ்லிம்கள் நுழைய தடை விதிப்பேன் என்று வெளிப்படையாக அறிவித்திருக்கிறார். இதனால் உலகின் பல தலைவர்கள் இவரைப் பற்றி வெளிப்படையாக விமர்சனம் செய்கின்றனர்.
டொனால்ட் டிரம்ப் பற்றி பிரான்ஸ் பிரதமர் மானுவேல் வேல்ஸ் கூறியுள்ளதைப் பாருங்கள்….
அமெரிக்க அதிபர் பதவிக்கு போட்டியிடும் டொனால்ட் டிரம்ப் ஒரு சிறியமனிதர் மட்டுமல்லாமல் அவர் மோசமான மனிதரும் ஆவார் எனகூறியுள்ளார். பிரசாரங்களின் போது அவர் பயன்படுத்தும் வார்த்தைகள்,முஸ்லீம் மக்கள் அமெரிக்க நாட்டிற்குள் நுழைவதற்கு தடை விதிப்பேன் எனகூறுவது எல்லாம் அவரை சிறிய மனிதராக சித்தரிக்கிறது.
அதுமட்டுமின்றி சக வேட்பாளர்களையும் அவமதிப்பதோடு மட்டுமல்லாதுஅகதிகள், மெக்சிகன்ஸ், பெண்கள் என அனைவரையும் இழிவாகவே பேசுகிறார்என கூறி உள்ளார்.
இப்போது இந்தக் கதையெல்லாம் எதற்கு? என்று கேட்கிறீர்களா? அவசரப்படாதீர்கள். இப்போது தமிழகத்திலும் தேர்தல் நடைபெறவிருக்கிறது. இந்தத் தேர்தலில் பல முதல்வர் வேட்பாளர்கள் இருந்தாலும் அவர்களில் வெற்றிக்கான வாய்ப்பில் முன்னிலையில் இருப்பவர்கள் ஜெயலலிதாவும் கருணாநிதியும்தான். மூன்றாவதாக விஜயகாந்தைச் சொல்லலாம்.
இது எல்லோரும் ஒப்புக்கொள்ளும் உண்மை. இநிந்லையில் நடிகர் கமல் தன்னுடைய டிவிட்டர் பதிவில், ஃபிலிபைன்ஸில் மேடைவிவேகமில்லாத கட்டப்பஞ்சாயத்துக்காரரைத்தான் Presidentஆக்கியிருக்கின்றனர் அடுத்து USA.. தமிழகமும்உலகோடொத்துபோய்விடுமோ? என்று கவலைப் பட்டிருக்கிறார்.
அவருடைய சொல்லைப் பார்க்கும்போது பிலிப்பைன்ஸில் வெற்றி பெற்றரோட்ரிகோ டியூடெர்டோ , அமெரிக்கத் தேர்தலில் வெற்றி பெறக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிற டொனால்ட் டிரம்ப் ஆகியோரின் குணத்தை ஒத்தஜெயலலிதா மீண்டும் ஜெயித்துவிடுவாரோ என்கிற பயம் தெரிகிறது. ஜெயலலிதா சரியானவர் இல்லை என்கிற விமர்சனம் இருக்கிறது. அவர் உலகநாயகன் என்பதால் உலக நாடுகளை உதாரணமாகக் காட்டிக் கவலைப்பட்டிருக்கிறார் என்று சொல்கிறார்கள்.


