நிர்மலா சீதாராமனின் நிதிநிலை அறிக்கை – ப.சிதம்பரம் கேள்விகள்

2026 – 27 ஆம் ஆண்டுக்கான ஒன்றிய நிதிநிலை அறிக்கை நேற்று பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது.

இதுகுறித்து முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம் கூறியதாவது….

நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனும்,ஒன்றிய அரசும் பொருளாதார ஆய்வறிக்கையை முழுமையாகப் புறக்கணித்துவிட்டனர்.கடன் வாங்குவதிலும் செலவு செய்வதிலும் தவறில்லை.ஆனால், அரசாங்கம் நிதி ஒருங்கிணைப்பைத் தற்போதைய வேகத்தில் அல்லாமல்,மிக விரைவாகச் செய்ய வேண்டும்.

சுமார் ரூ.88,000 கோடி நிதி ஒதுக்கி 100 நாள் வேலைத் திட்டத்தில் 50 நாள்கள் தான் வேலை வழங்கப்படுகிறது.
தற்போது வெறும் ரூ.95,000 கோடி நிதி ஒதுக்கி வி பி ஜி ராம் ஜி திட்டத்தில் எப்படி 125 நாட்கள் வேலை வழங்க முடியும்?

இந்த பட்ஜெட் எங்கே வேலை வாய்ப்புகளை உருவாக்குகிறது? இளைஞர்களுக்கு வேலை வாய்ப்புகள் பற்றி எங்கே கூறுகிறது? இந்தியாவுக்கு வரும் நேரடி வெளிநாட்டு முதலீடுகளின் ஓட்டம் குறித்த நிச்சயமற்ற நிலை மற்றும் கடந்த பல மாதங்களாகத் தொடரும் வெளிநாட்டுப் பங்கு முதலீடுகளின் வெளியேற்றம் ஆகியவை எதுவும் குறிப்பிடப்படவில்லை

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Leave a Response