
தமிழ்நாடு பாஜகவின் தலைவராக நயினார் நாகேந்திரன் பொறுப்பேற்றதிலிருந்து முன்னாள் தலைவர் அண்ணாமலை மற்றும் அவருடைய ஆதரவாளர்களுக்கு எதிரான வேலைகளைச் செய்து வருவதாகக் குற்றம் சாட்டப்பட்டது.
அதை மெய்ப்பிக்கும் விதமாக அண்மையில் ஒரு நிகழ்வு நடந்துள்ளது.
நவம்பர் 28 ஆம் தேதி நயினார் நாகேந்திரன் வெளியிட்டுள்ள அறிவிப்பில்,
திருவள்ளூர் மேற்கு மாவட்டம் திருவேற்காடு மண்டலத்தைச் சேர்ந்த திரு.ஜானிராஜா அவர்கள் கட்சிக்குக் களங்கம் விளைவிக்கும் செயலில் ஈடுபட்டதால் கட்சியின் அடிப்படை உறுப்பினரிலிருந்து உடனடியாக நீக்கப்படுகிறார்.
ஆகவே,கட்சியின் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் அவரிடம் கட்சி சார்பாக எவ்விதத் தொடர்பும் வைத்துக் கொள்ள வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறது.
என்று கூறியிருக்கிறார்.
இது அண்ணாமலை ஆதரவளர்கள் மத்தியில் கடும் எதிர்ப்புக்கு ஆளாகியிருக்கிறது.
நீக்கப்பட்ட ஜானிராஜா இது தொடர்பாக வெளியிட்டுள்ள பதிவில்,
நயினார் நாகேந்திரன், நீங்க பாஜகவில் சேர்வதற்கு முன்பிலிருந்தே நாங்கள் மோடிஜி பாஜகவில் கொள்கை ரீதியாக உள்ளோம் அதனால் நீங்கள் தொடர்ந்து திராவிட கொள்கையோடு எடப்பாடிக்கு கூஜா தூக்குற வேலையை மட்டும் பாருங்க.
திமுக என் மீது பொய் வழக்கு போட்டு அலைக்கழிக்கும் போது கண்டுக்காம சுயநலமாய் இருந்த திராவிட பாஜக என்ன தகிதி இருக்கு என் மீது களங்கம் சுமத்த?
மக்களே இந்த திராவிட பாஜக மற்றும் இவங்களோட கூட்டாளி எதிமுகவை நம்பி யாரும் உங்க வாழ்க்கையை தொலைச்சிகாத்தீங்க.
மக்களே பாஜகவின் நலனுக்காக திராவிட பாஜகவை புறக்கணித்துவிட்டு தொடர்ந்து மோடி ஜி மற்றும் அண்ணாமலையார் பாதையில் பயணிப்போம்.
என்று பதிவிட்டுள்ளார்.
இதனைத் தொடர்ந்து அவருக்கு ஆதரவாக அண்ணாமலை ஆதரவாளர்கள் பலர் பதிவிட்டு வருகின்றனர்.
இதற்கு அண்ணாமலை எதிர்வினை ஆற்றுவாரா? என்கிற எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது.


