
சிபிஐ எனப்படும் மத்திய புலனாய்வுத்துறை இயக்குநர் அலோக்வர்மாவை கட்டாயவிடுப்பில் அனுப்பிவிட்டு நள்ளிரவில் நாகேஷ்வர்ராவ் என்பவர் இயக்குநராக நியமிக்கப்பட்டிருக்கிறார்.
இதன்பின்னணி குறித்து ஆய்வாளர் சுபகுணராஜன் எழுதியுள்ளதாவது….
தில்லி சிபிஐ ( மத்திய புலானாய்வு துறை) யில் நடப்பது ஏதோ, அதன் இயக்குனர் அலோக் வர்மாவுக்கும் ,கூடுதல் இயக்குனருக்குமான ராகேஷ் அஸ்தானாவிற்கும் , இடையே நடக்கும் ஈகோ மோதல் என்றோ, அஸ்தானா ‘கோமாதா மாமிச கறி ‘ ஏற்றுமதியாளர் வழக்கில் வாங்கிய லஞ்சப்பணம் தொடர்பானது என்று கருதினால் நீங்கள் ஐயோ பாவம். குஜராத் சோராஃபுதின் கொலையில் , இந்தியாவின் நம்பர் ஒன் மாஃபியா தலைவனை( அமித் ஷா) காப்பாற்றிய அதிகாரிக்கு சில கோடிகள் பொருட்டே இல்லை.
ராகேஷ் அஸ்தானா ஒரு வருடத்திற்கு முன்பு தில்லி சிபிஐ க்கு நகர்த்தப்பட்டதே பெரும் சதியொன்றின் அடிப்படையில்தான். ஆம், மோடி, ஷா மீதான சாத்தியமாக கூடிய வழக்குகளையும்( possible criminal cases) , ஏற்கனவே நிலுவையில் இருந்த வழக்குகளையும் ‘ முடித்து வைக்க அல்லது ஒளித்து விடவே’ .
2015ல் ப்ரெஞ்ச் ரஃபேல் டீல் நடத்தும் போதே தங்களைச் சிக்க வைக்க விடயங்கள் இருப்பது கொள்ளையர்க்கு நன்றாகத் தெரியும். காங்கிரஸும், ராகுலும் மோப்பம் பிடிப்பதும் தெரிந்து விட்டது. அதனால்தான் அஸ்தானா தில்லி நகர்வு .சினிமாவில் என்கௌண்டர் அதிகாரி என்ட்ரி போல .
இதில் அலோக் வர்மா அதிருப்தி அடைந்தது இயற்கை . இதைப் பயன்படுத்த ஆரம்பித்தது ராகுல் டீம் . இதன் உச்சம்தான் ஜஸ்வந்த் சிங், யஷ்வந்த் சின்ஹா , பிரசாந்த் பூஷன் ஆகியோரின் ரஃபேல் ஊழல் புகார் மனுவை சிபிஐ அலுவலகத்திலேயே அலோக் வர்மா பெற்றது. அதைத் தொடர்ந்த அலோக் வர்மா நடவடிக்கைதான் அஸ்தானாவை ‘கோமாதா மாமிச ஏற்றுமதி’ ஊழல் புகாரின் பேரில் வழக்கு பதிந்தது. ஊழல் புகாரே அஸ்தானாவை ‘மில்லியன் டாலர்
ரஃபேல் ஊழல் ‘ ஆவணங்களை அழிக்க விடாமல் தடுக்கவே.
ஆனால், இதோ மோடிக்கு ‘ஜெயில் கிளி ‘ பிடித்து ஆட்ட , இயக்குனர் அலோக் வர்மாவும் , ‘கோமாதா கறி ‘ வழக்கு விசாரணை அதிகாரி மாலிக்கும் இன்னும் சிலரும் கட்டாய விடுப்பில் அனுப்பப்பட்டு விட்டனர். புதிதாக நாகேஸ்வரராவ் எனும் இணை இயக்குனர் அதிரடியாக பொறுப்பில் அமர்த்தப்பட்டுள்ளார்.
இந்திய ஒன்றியத்தின் அரசியல்கள மிக மோசமான நகர்வுகளின் போது ‘ராவ்’கள் பங்களிப்பு ஆபத்தானது ( ராஜிவ் கொலையைச் செய்ததாக கருதப்பட்ட இதே போலொரு மாஃபியா கொணர்ந்த பிரதமர் நரசிம்மராவ் , பாப்ரி மஸ்ஜித் இடிப்பு எல்லாம் நினைவிற்கு வந்து அச்சுறுத்துகிறது )ஏதோ, பரபரப்புக்காக சொல்லவில்லை, மோடி/ ஷா இணை நிதானம் இழந்து விட்டது ( மோடி எப்போதும் நிதானம் அற்ற நபர் என்பது தனிக்கதை). சினிமா கிளைமேக்ஸ் போல ஐந்து மாநிலத் தேர்தல் மற்றும் 2019 ற்கான காட்சிகள் ஆரம்பமாகி விட்டன.


