இயக்குனர் விஜய்யின் சொந்தக்கதையில் ஒரு படம், இது என்ன மாயம்?


மேஜிக் பிரேம்ஸ் பட நிறுவனம் சார்பில் ஆர்.சரத்குமார், ஆர்.ராதிகா சரத்குமார், லிஸ்டின் ஸ்டீபன் தயாரிக்கும் படம் “ இது என்ன மாயம் “ இந்தப் படத்தின் பாடல்கள் வெளியீட்டுவிழா ஏப்ரல் 6 அன்று நடைபெற்றது. விழாவில் இயக்குனர்கள் விக்ரமன், செல்வமணி, வசந்த், பிரபுசாலமன், கவுதம், எழில் உள்ளிட்டோரும் தயாரிப்பாளர்கள் சங்கத்தலைவர் தாணு உள்ளிட்ட நிர்வாகிகளும் கலந்துகொண்டனர். நீண்டைடைவெளிக்குப் பிறகு நடிகை மீனா இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்டார்.
இந்தப் படத்தில் விக்ரம்பிரபு நாயகனாக நடிக்கிறார். நாயகியாக கீர்த்திசுரேஷ் நடிக்கிறார். மற்றும் நவ்தீப், அம்பிகா, நாசர், சார்லி, ஜீவா, பாலாஜிவேணுகோபால், ஆர்,ஜே.பாலாஜி, அஜெய் ஆகியோர் நடிக்கிறார்கள்.
ஒளிப்பதிவு நிரவ் ஷா, இசை ஜி.வி.பிரகாஷ்குமார், பாடல்கள் நா.முத்துக்குமார்,
படத்தொகுப்பு ஆண்டனி, கலை செல்வகுமார், நடனம் ஷோபி, காயத்திரிரகுராம், சதீஷ், ஷெரிப், சப்னா சிஸ்டர்ஸ், சண்டைப்பயிற்சி ஸ்டன்ட் சில்வா கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் – விஜய்
படம் பற்றி இயக்குனர் விஜய் சொல்லும்போது, இது காதல் சம்மந்தப்பட்ட படம் தான்..காதல்ங்கிறது ஒரு உணர்வுப்பூர்வமான விஷயம்..அது யாருக்கு வருகிறது..அவர்களுக்கு அது எந்தக் கால கட்டத்தில் வருகிறது என்பது தான் காதலின் மகத்துவம். ஒருவருக்கு அது..ஆணாக இருந்தாலும் பெண்ணாக இருந்தாலும் காதல் பூக்கிற தருணம் இனிமையானது. அதைத் தான் இது என்ன மாயம் பிரதிபலிக்கும். இதில் இரண்டு காலகட்டங்கள்! ஒன்று ஜாலியாகத் திரிந்த கல்லூரி வாழ்க்கை… இன்னொன்று கல்லூரியை விட்டு வந்து நிகழ்கால வாழ்கையில் கடந்த கால இனிமையை நினைத்துப் பார்க்கும் காலகட்டம்! எனக்கு எல்லாம் மறந்து போச்சு என்று சொல்கிறவன் கூட தனது காதலை மறக்க முடியவில்லை என்றே சொல்வான்.
அழகான காதலனாக அருண் பாத்திரத்தில் விக்ரம்பிரபு வாழ்ந்திருக்கிறார். கீர்த்திசுரேஷ் நடித்திருக்கிறார் என்று சொல்வதை விட கதாபாத்திரத்தில் வாழ்ந்திருக்கிறார் என்று சொல்கிறார் இயக்குனர் விஜய்.
வழக்கமாக இயக்குனர் விஜய், மொழிமாற்றுப் படங்களை எடுப்பார் அல்லது வேற்றுமொழிப் படத்தை அப்படியே அடித்துவிடுவார் என்று சொல்லப்படும், இந்தப்படத்தின் கதை விஜய்யின் சொந்தக்கதையாம். இந்தப்படத்திலாவது எந்தச்சிக்கலும் இல்லாமலிருக்க வேண்டும்.

Leave a Response