
தமிழகத்தில் போக்குவரத்து பேருந்துக் கட்டணங்கள் திடீர் என உயர்த்தப்பட்டுள்ளன. இந்த கட்டண உயர்வு, சனவரி 19,2018 மாலை அறிவிக்கப்பட்டு சனவரி 20,2018 அன்று முதலே அமலுக்கு வருகின்றன.அதாவது அறிவித்த சில மணி நேரங்களிலேயே அமுலுக்கு வந்துள்ளது.
மாற்றியமைக்கப்பட்ட புதிய பேருந்துக் கட்டணம், தனியார் பேருந்துகளுக்கும் பொருந்தும்.
மாவட்டங்களில் உயர்த்தப்பட்ட பேருந்து கட்டணம். (1 முதல் 20 ஸ்டேஜ் வரை) 3 ரூபாயிலிருந்து 5 ரூபாயாக உயர்த்தப்படுகிறது. அதிகபட்ச கட்டணம் 12ரூபாயிலிருந்து 19 ரூபாயாக உயர்த்தப்படுகிறது.
சென்னை மாநகரப் போக்குவரத்துக் கழகம், சென்னையில் உயர்த்தப்படும் கட்டணம் (1 முதல் 28 ஸ்டேஜ் வரை) 3 ரூபாயிலிருந்து 5 ரூபாயாகவும், அதிகபட்ச கட்டணம் 14 ரூபாயிலிருந்து 23 ரூபாயாகவும் உயர்த்தப்பட்டுள்ளது.
மாற்றியமைக்கப்பட்ட புறநகர் கட்டணம் குறைந்தபட்ச பயணக் கட்டணம் (ரூபாயில்)
புறநகர் தற்போதைய கட்டணம் மாற்றியமைக்கப்பட்டுள்ள புதிய கட்டணம் விபரம்:
சாதாரணப் பேருந்து (10 கி.மீ) 5 ரூபாயிலிருந்து 6 ரூபாயாக உயர்வு
விரைவுப் பேருந்து (30 கி.மீ.) 17 ரூபாயிலிருந்து 24 ரூபாயாக உயர்வு
அதி சொகுசு இடைநில்லாப் பேருந்துகள் புறவழிச்சாலை இயக்கப் பேருந்துகள் (30 கி.மீ) 18 ரூபாயிலிருந்து 27 ரூபாயாக உயர்வு
அதிநவீன சொகுசு பேருந்து (30 கி.மீ) 21 ரூபாயிலிருந்து 33 ரூபாயாக உயர்வு
குளிர்சாதனப் பேருந்து (30 கி.மீ) 27 ரூபாயிலிருந்து 42 ரூபாயாக உயர்வு
வால்வோ பேருந்து (30 கி.மீ) 33 ரூபாயிலிருந்து 51 ரூபாயாக உயர்வு
மலை மேல் செல்லும் சாதாரண பேருந்து (6 கி.மீ) 4 ரூபாயிலிருந்து 6 ரூபாய் மற்றும் 20 சதவீதம் கூடுதல் கட்டணம்.
மலைமீது செல்லும் விரைவு பேருந்து (30 கி.மீ) 20 ரூபாயிலிருந்து 24 ரூபாய் மற்றும் 20 சதவீத உயர்வு.
இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இது குறித்து தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பில், ”எதிர்காலத்தில் எரிபொருள் மற்றும் கிரீஸ் எண்ணெய் விலை ஏற்றங்கள், இயக்கச் செலவுகள், பழுது நீக்கும் செலவுகள் மற்றும் பராமரிப்பு செலவுகளில் ஏற்படும் மாற்றங்கள், பணியாளர்களுக்கான ஊதிய உயர்வு போன்றவற்றை உள்ளடக்கிய அளவீட்டு குறியீட்டின் அடிப்படையில், அரசு உயர் அதிகாரிகளைக் கொண்ட குழுவினால் பேருந்துக் கட்டணம் மாற்றியமைக்கப்படும்.
மாற்றியமைக்கப்பட்ட புதிய பேருந்துக் கட்டணம், தனியார் பேருந்துகளுக்கும் பொருந்தும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன் மூலம் கட்டண உயர்வு இனி அடிக்கடி கால இடைவெளியில் இருக்கும், இதே போல் தனியார் பேருந்து கட்டணமும் இதையொட்டி உயர வாய்ப்புள்ளது.
