எனக்குக் கடும்போட்டி ஓவியாதான் – பிந்துமாதவி ஒப்புதல்

பிக்பாஸ் நிகழ்ச்சியில் முதலில் 14 போட்டியாளர்கள் பங்கேற்கும் பிக்பாஸ் நிகழ்ச்சி என்று கூறப்பட்டது.

ஆனால், இறுதியில் நமீதா 15வது போட்டியாளராக கலந்து கொண்டார். இந்நிலையில், கிட்டத்தட்ட 36 நாட்கள் கடந்த நிலையில், 6 பேர் ஏற்கனவே வெளியேறிவிட்டனர்.

மீதமுள்ள 9 போட்டியாளர்களுக்கு இடையில் ஏகப்பட்ட பஞ்சாயத்து. இதனை தீர்த்து வைக்க வாரத்திற்கு இருமுறை பஞ்சாயத்து தலைவராக கமல்ஹாசன் வந்து செல்கிறார். இந்நிலையில், ஓவியாவுக்கு போட்டியாக பிந்து மாதவி களத்தில் குதித்துள்ளார்.

ஆம் , நடிகை பிந்து மாதவி இன்று பிக்பாஸ் நிகழ்ச்சியின் புதிய போட்டியாளராக வீட்டில் நுழைந்துள்ளார்.

இதுவரை ஒளிபரப்பப்பட்ட அனைத்து எபிசோடுகளையும் பார்த்துவிட்ட அவர், அதைப்பற்றி வீட்டில் யாருடனும் பகிரக்கூடாது என கமல் சொன்ன விதியை அவர் ஏற்றுக்கொண்டு தான் உள்ளே சென்றார்.

மேலும் உங்களுக்கு கடும் போட்டியாக யார் இருப்பார்கள் என கமல் கேட்டதற்கு, “Of course ஓவியா தான்” என பிந்து மாதவி கூறினார்.

இந்த விசயம், வீட்டில் உள்ள போட்டியாளர்களுக்குத் தெரியாத நிலையில், பிந்துமாதவி வீட்டில் நுழைந்தவுடன் பாட்டு ஒலிக்கப்பட்டு டான்சர்ஸ் ஆடினர். அப்போது, ஓவியா மற்றும் கனேஷ் ஆட்டம் போட்டனர்.

பின்பு, அனைவரும் அவரை வரவேற்று வீட்டிற்குள் அழைத்துச் சென்றனர். அப்பொழுது, வையாபுரி பிந்துமாதவியை பார்த்து தப்பு பன்னீட்டீங்களே என்று கூறுகிறார். பிந்துவும், ஆமா தப்பு பன்னீட்டனோ? எனக் கேட்டவாறு வீட்டிற்குள் நுழைகிறார்.

இதற்கிடையில், வீட்டிற்குள் நுழைந்த சிறிது நேரத்திலேயே ஓவீயாவைப் போன்றே பிந்து மாதவிக்கும் சமூக வலைதளத்தில் புரட்சிப்படை ஆரம்பிக்கப்பட்டு மிகவும் வைரலாகி வருகிறது.

Leave a Response