தமிழ் அறிவியலின் பெருமைமிகு அடையாளம் அப்துல் கலாம் – சீமான் புகழ்வணக்கம்

27-07-2017 அப்துல்கலாம் இரண்டாம் ஆண்டு நினைவுநாள் – சீமான் புகழ்வணக்கம்

எல்லாப் பறவைகளும் மழைக் காலங்களில் கூடுகளில் அடையும்; ஆனால் கழுகு மழையைத் தவிர்க்க மேகத்திற்கு மேலாகப் பறக்கும்!

கரைகளைக் கடக்கும் துணிவிருந்தால்தான் புதிய கடல்களைக் கண்டுபிடிக்க முடியும்!
தேசத்தின் மகுடமே அதன் சிந்தனையாளர்கள்தான்.

நீங்கள் சூரியனைப் போல ஒளிரவேண்டுமானால் முதலில் சூரியனைப் போல எரிய வேண்டும்.

உங்களுக்குச் சிறகுகள் உள்ளன. தவழ்ந்து செல்லாதிர்கள்! அதைக்கொண்டு மேலே பறந்து செல்லுங்கள்.

பெரிய விசயங்களுக்காகக் காத்திருக்கக் கூடாது. கையில் என்ன இருக்கிறதோ? அதைக்கொண்டு பயணத்தைத் தொடங்கவேண்டும்.

கருணை இல்லாத அறிவியல் முழுமைபெறாது.

வானத்தைப் பாருங்கள்! நாம் தனித்து இல்லை! இந்தப் பிரபஞ்சம் முழுதும் நம்மிடம் நட்பாக உள்ளது. கனவு காண்பவர்களுக்கும் உழைப்பவர்களுக்கும் அது சிறந்தவற்றை வழங்குகிறது.

நீங்கள் உறங்கும்போது வருவதல்ல கனவு!
உங்களை உறங்கவிடாமல் செய்வதே கனவு!

போராட்டம் இல்லாத வாழ்க்கை உப்பில்லாத உணவுபோலச் சாப்பிடமுடியாது!
அதுபோலப் போராட்டம் இல்லாமல் வாழ்வில் வெற்றியடையமுடியாது!

தமிழ் அறிவியலின் பெருமைமிகு அடையாளம் நமது ஐயா அப்துல் கலாம் அவர்களின் நினைவுநாள் இன்று(27-07-20174).
அந்த மகத்தான மாமனிதருக்கு நம் புகழ்வணக்கத்தைச் செலுத்துவோம்!

Leave a Response