
விஜய் தொலைகாட்சியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சி பற்றி பிரபல எழுத்தாளரும் உன்னதம் இதழின் ஆசிரியருமான கவுதமசித்தார்த்தன் எழுதியுள்ள பதிவில்,
ஒரு பிக் பாஸ் பதிவு..
முடை நாற்றமெடுத்து அழுகி வீச்சமடிக்கும் குறுங்குழுவாதப் போக்குகளுக்கு எதிராக தொடர்ந்து ஒற்றை பிம்பமாகப் போராடி வருகிறேன். அதனாலேயே தனிமைப்படுத்தப்பட்டும் வருகிறேன் என்பது என் எழுத்தியக்கத்தைப் பின்தொடரும் சீரிய வாசகனுக்குத் தெரியும்.
பிக் பாஸ் நிகழ்ச்சியில் இந்தக் குழுவாத அதிகாரப் போக்கை எதிர்த்துப் போராடும் ஓவியாவை எனக்கு மிகவும் பிடித்துப் போனது. தொடர்ந்து பிக் பாஸ் பார்க்கிறேன். எதிர்வரும் காலங்களில் பிக் பாஸ் குழுவினரின் டார்ச்சர் தாளாமல் ஓவியாவும் தனது சுய ஆளுமையை விட்டுக் கொடுத்து ஐக்கியமாகலாம்,தற்போதைய ஓவியாவை எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது அவ்வளவே…
பண்டைய இலக்கியப் பெருமகனார்கள் போட்ட “இந்த ராஜபாட்டை”யிலேயே வெற்றிகரமாக நடந்து கொண்டிருக்கும் இளம் தலைமுறை எழுத்தாளர்களுக்கு இந்தப் பதிவு சமர்ப்பணம்..
இவ்வாறு அவர் எழுதியிருக்கிறார்.


