அமைச்சர் செங்கோட்டையனின் நேரடித் தடை தகர்த்து நடந்த பாராட்டுவிழா – விவசாயிகள் உற்சாகம்

ஈரோடு மாவட்டம் கோபியில் விவசாயிகள் சங்கத்தலைவர் அய்யாக்கண்ணுக்குப் பாராட்டுவிழா நடந்தது.பல்வேறு தடைகளைத் தாண்டி அந்நிகழ்வு நடந்திருக்கிறது. இதுபற்றி தற்சார்பு விவசாயிகள் சங்கம் சார்பில் கி.வே.பொன்னையன் வெளியிட்டுள்ள குறிப்பில்….

விவசாயிகள் கோரிக்கைகளை முன்னெடுத்துப் போராடி வரும் அய்யாக்கண்ணு அவர்களுக்கு கோபியில் பாராட்டுவிழா நடத்த மத்திய அரசு கொடுத்த நெருக்கடியால் மாநில அரசு குறிப்பாக அமைச்சர் செங்கோட்டையன் நேரடியாக இறங்கி தடைகள் போட்டார்.

நிகழ்ச்சி ஏற்பாட்டுக் குழுவின் உறுதி,அய்யாக்கண்ணு அவர்களின் போராட்டப்பண்பு, திரண்ட மக்களின் ஆதரவு இவைகளைக் கொண்டு தடை எனில்அதை உடை என்ற கொள்கையோடு நொறுக்கப்பட்டது.

சுமார் ஆயிரம் பேர் திரண்டு வரவேற்பு அளித்து விண்ணதிரும் முழக்கத்துடன்ஊர்வலமாகச் சென்றோம்.சீப்பை எடுத்து வைத்தால் கல்யாணம்நின்று விடும் என. ஆளும் கும்பல் கனவு கண்டது.ஏரோட்டும் உழவர்கள் கூவத்தூர்கைக்கூலிகள் அல்ல ,என்பதை உணர்த்திவிட்டனர்.

கரட்டடிபாளையத்தில் தோழர் மா.கந்தசாமி அவர்கள் வீட்டு மாடியில் மேடை அமைத்து வீட்டிற்கு எதிரிலுள்ள மிகப்பரந்த திடலில் இருக்கைகள்போட்டு மாநாடு போல் விழா நடந்தது.

டெல்லி ஆட்சியாளர்கள் உலக வர்த்தக நிறுவனத்தின் ஆணைக்கிணங்க நமது வேளாண்மையை,உணவுப்பாதுகாப்பை அழித்து பன்னாட்டு சந்தை ஆதிக்கத்திற்கு பலியிட்டு வருகின்றனர்.அதன் ஒரு பகுதியாக உணவு தானியக் கொள்முதலைக்கை விடுதல்,விவசாய உற்பத்தி மானியத்தை நிறுத்துவது,ரேசன்கடைகளை இழுத்து மூடுவது என்ற ஏகாதிபத்திய ஆதிக்கத்தின் மூலம்உணவுப் பாதுகாப்பு என்னும் வேளாண்தற்சார்பை முற்றாக ஒழிப்பதை காங்கிரசும்அதைவிட வேகமாக பாஜகவும் செய்து
வருவதை மே-17 இயக்கத் தோழர் திருமுருகன் ஆதாரங்களோடு அழுத்தமாக எடுத்துரைத்தார்.மேலும் நீட் மூலம் தமிழகத்தின்நல்வாழ்வை அழிக்கும் சதியையும் விளக்கினார்.

இந்தப் பின்னணியில் டெல்லியில்நடந்த விவசாயிகளின் போராட்டத்தையும்அதை மோடி உதாசீனப்படுத்தியதையும்திருமுருகன் அம்பலப்படுத்தினார்.சாரமாக நாங்கள் இந்துவுமல்ல,இந்தியனுமல்ல தமிழர்கள் என உணர்ச்சிப்பெருக்கோடு கூறினார்.

அய்யாக்கண்ணு டெல்லிப் போராட்டம்எத்தனை அடக்குமுறைகள்,அச்சுறுத்தல்களை எதிர்கொண்டு முன்னேறியது என நயம்பட
உரைத்தார். எச்.ராஜாவின் கோயபல்ஸ் பித்தலாட்டத்தை தோலுரித்ததோடு கோபியில் உள்ள ராஜாவின் வலதுகாமாக விளங்கும் நபர் விவசாயிகள்சங்கம் என்ற பெயரில் வெளியிட்டிருந்த அவதூறு துண்டறிக்கைக்கு ஆப்பரையும்பதில்களை முன்வைத்தார்.

நிகழ்வு ஈரோடு மாவட்ட விவசாயிகள்நடுவில் பெரும் உத்வேகத்தை நம்பிக்கையை உருவாக்கியுள்ளது. தமிழர் உரிமைக் கழகத்தையும் அதன்ஒருங்கிணைப்பாளர் கந்தசாமி அவர்களையும் வாழ்த்துகிறோம்.

இவ்வாறு அதில் கூறப்பாட்டுள்ளது.

Leave a Response