தமிழில் ட்வீட் செய்தால் மட்டும் நம்பிடுவோமா? – மோடியின் ட்விட்டரில் கடும் எதிர்வினைகள்

புத்தரின் பிறந்தநாள், ஞானோதயம் பெற்ற நாள், உயிர் நீத்த நாள் ஆகிய மூன்றையும் வெசாக் நாளாகக் கொண்டாடுவது வழக்கம். இதை முன்னிட்டு, மே 12-ம் தேதி முதல் 14-ம் தேதி வரை ஐ.நா சபையின் சர்வதேச மாநாடு இலங்கையில் நடைபெறுகிறது. இதில், பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்கிறார்.

இன்று (மே 11) பயணம் செய்யும் மோடி, புறப்படுமுன்,

‘இரண்டு நாள் விஜயத்தை மேற்கொண்டு இலங்கையில் இருப்பேன். அப்போது, வெசாக் தினக் கொண்டாட்டங்கள் மற்றும் ஏனைய நிகழ்ச்சிகளில் இணைந்துகொள்வேன்’ என்று தமிழில் ட்வீட் செய்துள்ளார்.

இதற்கு சிலர் மகிழ்ச்சி தெரிவித்து பதிலளித்திருந்தாலும் பெரும்பான்மையோர் மோடிக்கு எதிரான கருத்துகளை அவருக்கான பதிலாகத் தெரிவித்திருக்கின்றனர்.

அவற்றில் சில….

Nal.Thamizhazhagan‏ @thamizhazhagann 4h4 hours ago
Replying to @narendramodi
தமிழர்களுக்கு எதிராக செயல்படும் இலங்கை அரசுக்கு ஆதரவான பயணம்.

Elavarasan Sokku‏ @twit2ela 3h3 hours ago
Replying to @narendramodi
நீங்கள் மக்கள் மீது அக்கரை இருப்பவர் என்றால் மீனவர்கள் மீதான தாக்குதலை கண்டித்து வரவும்

NAGARAJAN T V‏ @NAGARAJANTVN 3h3 hours ago
Replying to @narendramodi
தமிழில் tweet யமைக்கு நன்றி.அப்படியே தமிழ்நாட்டில் உள்ள மைல் கல்லில் ஹிந்தியில் மாற்றுவதை நிறுத்திக் கொண்டால் பெரிய நனறி

krishnan‏ @krishnang2393 2h2 hours ago
Replying to @narendramodi
உங்கள் கர்பரேட் BUSY-ல் கொஞ்சம் மீனவர்களையும் பார்க்கவும் PM.
வழக்கம் போல் PHOTOSHOP & விளம்பரம் செய்ய வேண்டாம்(பக்தர்களிடம் சொல்லவும்).

Siva‏ @siva_tamilanda 2h2 hours ago
Replying to @narendramodi
நமது இந்திய மீனவன் பிரிட்சோவை சுட்டது யார் என்று கண்டு பிடித்து குற்றவாளி கூண்டில் ஏற்றுங்கள்

praveensivam‏ @sivampraveen 31m31 minutes ago
Replying to @narendramodi
தமிழில் ட்வீட் செய்தால் மட்டும் நாங்க நம்பிவிடுவோமா..என்ன பண்ணாலும் ஹிந்தி திணிப்பை எதிர்த்துக்கிட்டே டான் இருப்போம்..

தமிழ் பொறுக்கி‏ @sk_aero 1h1 hour ago
Replying to @narendramodi
டில்லியில் நிர்வாணமாய் எம்மினத்து விவசாயிகள் கெஞ்சிய போது செவிமடுக்காத நீர், தமிழில் எழுதினாலும் எம்தமிழுக்கு இழுக்கே.

Martin Ravi‏
@martin_durai
Replying to @narendramodi
அய்யா சாமி சிங்களன பாக்க தானே போனீரு பின்ன இன்னா பீப்புக்கு தமிழ்ல ட்வீட் பண்றீரு. தமிழின துரோகிகள் நீங்கள்.

thilaga kanagaraj‏ @thilagapretty 3h3 hours ago
Replying to @narendramodi
தமிழை மதித்தல் போல தமிழர்களையும் மதித்தால் நல்லது அது நமது மாண்புமிகு பிரதமருக்கு தெரியவில்லையே ஏன்???

இவை போல் இன்னும் பல எதிர்கருத்துகள் ட்விட்டரில் இருக்கின்றன.

Leave a Response