மே-1ஆம் தேதிக்காக 100 சவரன் தங்க காசு சேகரித்த விஜய்சேதுபதி..!


பிறருக்கு கொடுப்பதற்கும் ஒரு நல்ல மனம் வேண்டும்.. அதிலும் எதையும் விளம்பரத்திற்காக செய்யாமல், மனம் இட்ட கட்டளைப்படி அடுத்தவருக்கு உதவி செய்வது என்பது தமிழ் சினிமாவை பொறுத்தவரை ரொம்பவே அரிது.. ஆனால் அந்த விஷயத்தில் நடிகர் விஜய்சேதுபதி முற்றிலும் மாறுபட்டவராகவே இருக்கிறார்.

தமிழ்சினிமாவில் இப்போதுள்ள 33 துறைகளை சேர்ந்த சீனியர்களில் சிலரை தேர்ந்தெடுத்து அவர்களில் 100 பேருக்கு தலா ஒரு சவரன் வீதம் வழங்கி அவர்களை கௌரவிக்க முடிவு செய்திருந்தார் எஸ்.பி.ஜனநாதன்.. இந்த விஷயம் பற்றி கேள்விப்பட்ட விஜய்சேதுபதி, ஜனநாதனை தொடர்புகொண்டு, அந்த 100 சவரன் நகையையும் தானே வழங்குவதாக முன்வந்துள்ளார்

வெறும் பேச்சோடு நிற்காமல், 100 சவரன் காசுகளையும் முன்கூட்டியே வாங்கி கையிருப்பாக வைத்துவிட்டு, வரும் மே-1ஆம் தேதி இவற்றை பயனாளிகளுக்கு வழங்கும் விழாவை காமராஜர் அரங்கத்தில் நடத்துவதற்கான ஏற்பாடுகளிலும் ஜனநாதனுடன் ஈடுபட்டுள்ளார் விஜய்சேதுபதி.

Leave a Response