
எஸ்.எஸ்.ராஜமௌலி இயக்கத்தில் மிகப்பெரிய வெற்றிபெற்ற ‘பாகுபலி’ மிகப்பிரமாண்டமாக உருவாகி வரும் படம் பாகுபலி-2. கடந்த 16ம் தேதி இப்படத்தின் டிலைவர் வெளியாகி சாதனைகளை படைத்தது. இந்நிலையில் இன்று ஹைதராபாத்தில் உள்ள ராமோஜி பிலிம் சிட்டியில் இப்படத்தின் பாடல் வெளியீட்டு விழா நடந்து வருகிறது. இதில் கரண் ஜோஹர் சிறப்பு விருந்தினகராக கலந்து கொண்டார். பாடல் வெளியீட்டு விழாவை காண பிரத்யேகமாக மேடையும் அமைக்கப்பட்டது
இந்த பாடல் வெளியீட்டு விழாவில் இயக்குனர் ராஜமௌலி, ராணா, பிரபாஸ், ரம்யா கிருஷ்ணன், சத்யராஜ், அனுஷ்கா, தமன்னா, நாசர், நானி ஆகியோர் பலர் உள்பட சினிமா பிரபலங்கள் உடை வடிவமைப்பாளர்கள் உள்பட தொழில்நுட்பக்கலைஞர்கள் என அனைவரும் கலந்து கொண்டனர்
இதில் பேசிய சத்யராஜிடம் பாகுபலியை ஏன் கொன்றீர்கள்? என்ற கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த சத்யராஜ் கூறுகையில், தயாரிப்பாளர் சம்பளம் கொடுத்தார். இயக்குனர் பாகுபலியை கொல்லச்சொன்னார். அதனால், நானும் கொன்றேன் என்று வழக்கமான தனது பாணியில் பதிலளித்து சஸ்பென்சை உடைக்காமல் பார்த்துக்கொண்டார்.


