
தமிழர்களின் பாரம்பரிய வீர விளையாட்டுகளில் ஒன்றான ஜல்லிக்கட்டு போட்டிகளில் காளைகள் துன்புறுத்தப்படுவதாகக் குற்றம் சாட்டி, ஜல்லிக்கட்டு போட்டிகளுக்கு உச்ச நீதிமன்றம் தடை விதித்தது. அதன் காரணமாக கடந்த ஆண்டும் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறவில்லை. இந்த வருடம் ஜல்லிக்கட்டுப் போட்டியை எப்படியேனும் நடத்தியே தீர வேண்டும் என பல்வேறு தரப்பினரும் தொடர்ந்து ஆதரவுக் குரல் கொடுத்து வருகின்றனர்.
இந்நிலையில், நடிகர் சூர்யாவும் நமது நாட்டு மாட்டு இனங்களை அழிவில் இருந்து தடுப்பதற்காக, தானும் ஜல்லிக்கட்டு போட்டிக்கு ஆதரவு அளிப்பதாக நடிகர் சூர்யா தெரிவித்துள்ளார். இதுபற்றி அவர் சொல்லும்போது, “ஜல்லிக்கட்டு விளையாட்டினை முறையான வழிமுறைகளை வகுத்து நடத்தப்பட வேண்டும் எனவும் நமது நாட்டு மாட்டு இனங்களை அழிவில் இருந்து தடுக்கவும் அவற்றின் வளர்ச்சியினை பெருக்கவும் முறையான வழிமுறைகளை கையாள வேண்டும்” எனவும் கூறியுள்ளளார்.


