விடுதலையை வேண்டும் பொ.ஐங்கரநேசன் தமிழ்மாகாண முதலமைச்சரானார்

தமிழ் மாகாணமான வடமாகாண முதலமைச்சர் விக்கினேஸ்வரன் தனிப்பட்ட காரணமாக இலண்டன், மற்றும் கனடா ஆகிய நாடுகளுக்கு பயணம் மேற்கொண்டுள்ளார். இந்நிலையில் வடமாகாண விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசன், முதலமைச்சராகப் பொறுப்பேற்றுக் கொண்டார்.

இன்று (சனவரி 3-1017) செவ்வாய்க்கிழமை வடமாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரே முன்னிலையில் சத்தியப் பிரமாணம் செய்து முறைப்படி பொறுப்பை ஏற்றுக்கொண்டார்.

உறுதிமொழி எடுத்து பொறுப்பேற்கும் நிகழ்வு யாழ். மாவட்டச் செயலகத்திற்கு அண்மையில் அமைந்துள்ள வடமாகாண ஆளுநர் அலுவலகத்தில் நடைபெற்றது.

சனவரி மாதம் முழுக்க அவர் முதலமைச்சராக இருப்பார் என்று சொல்லப்படுகிறது.

இரண்டு நாட்களுக்கு முன்பாக பிறந்த ஆங்கிலப்புத்தாண்டு நாளையொட்டி பொ.ஐங்கரநேசன் விடுத்துள்ள வாழ்த்துச் செய்தியில், ஈழத்தமிழினம் அரசியல் மற்றும் பொருளாதார விடுதலை காண இயற்கை என்ற பேரிறைவன் இந்த ஆண்டிலேனும் அருள் பாலிப்பானாக! என்று சொல்லியிருந்தார்.

தமிழின விடுதலையை வேண்டி நிற்கிற ஒருவர் இப்பொறுப்பை ஏற்பது இக்காலகட்டத்துக்குத் தேவையான ஒன்று என்று ஈழத்தமிழர்கள் கருத்துத் தெரிவிக்கின்றனர்.

Leave a Response