கத்திச்சண்டை நிச்சய வெற்றிப்படம் – இயக்குநர் சுராஜ் நம்பிக்கை

ஜெயம் ரவி, ஹன்சிகா நடித்து அமோக வெற்றிபெற்ற ரோமியோ ஜூலியட் படத்தைத் தயாரித்த மெட்ராஸ் எண்டர்பிரைசஸ் எஸ் நந்தகோபால், கத்திசண்டை படத்தைத் தயாரித்து வருகிறார்.

இந்தப் படத்தில் விஷால் கதாநாயகனாக நடிக்கிறார். நாயகியாக தமன்னா நடிக்கிறார். நகைச்சுவை வேடத்தில் வடிவேலு, சூரி இருவரும் நடிக்கிறார்கள். மேலும் முக்கிய வேடத்தில் ஜெகபதிபாபு, தருண் அரோரா, சரண் தீப், ஜெயபிரகாஷ், நிரோஷா, தாடி பாலாஜி, ஆர்த்தி, பாவா லட்சுமணன் ஆகியோருடன் ஏராளமான நட்சத்திரங்கள் நடிக்கிறார்கள்.
ஒளிப்பதிவு ரிச்சர்ட் எம்.நாதன்,இசை ஹிப் ஹாப் தமிழா, பாடல்கள் நா.முத்துக்குமார், ஹிப் ஹாப் தமிழா வசனம் பசும்பொன் ஜோதி.

கதை, திரைக்கதை எழுதி இயக்குகிறார் சுராஜ்.

படம் பற்றி இயக்குநர் சுராஜ் கூறியதாவது,

இந்தப் படத்தை ஆக்ஷன், காமெடி , செண்டிமெண்ட் கலந்து உருவாக்கி உள்ளோம்.. 50 % காமெடி 50 % ஆக்ஷன். இதுவரை ஆக்ஷன் கதைகளில் நடித்துவந்த விஷால் இந்தப் படத்தில் காமெடியிலும், ஆக்ஷனிலும், செண்டிமெண்ட் காட்சிகளிலும் கலக்கி இருக்கிறார்.

வடிவேலும் சூரியும் காமெடியில் பின்னி இருகிறார்கள். தலைநகரம், மருதமலை படங்களுக்குப் பிறகு வடிவேலுவும் நானும் இந்தப் படத்தில் இணைந்து இருக்கிறோம். அதனால் மக்களிடையே படத்திற்கான எதிர்பார்ப்பைக் காண முடிகிறது.

இசையமைப்பாளர் ஹிப் ஹாப் தமிழா ரசிகர்களின் பல்ஸ் தெரிந்தவர் தனது சிறப்பான இசையால் இந்த படத்தின் ஐந்து பாடல்களையும் சிறப்பாக அமைத்துள்ளார். படிக்காதவன் படத்திற்கு பிறகு தமன்னாவும் நானும் இந்தப் படத்தில் இணைந்து பணியாற்றி உள்ளோம் அவரும் சிறப்பான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

படப்பிடிப்பு சென்னை, அருப்புக்கோட்டை , ஹைதராபாத், ஜார்ஜியா போன்ற இடங்களில் நடைபெற்றது. அனைத்துக் கட்ட வேலைகளும் முடிவடைந்து விட்டது.

“ த்ரிஷா இல்லனா நயன்தாரா “ வெற்றிப்படத்தை தொடர்ந்து “ இமைக்கா நொடிகள் “ படத்தை தயாரித்துக் கொண்டிருக்கும் கேமியோ பிலிம்ஸ் C.j.ஜெயகுமார் இந்த படத்தை இம்மாதம் வெளியிடுகிறார், இது நிச்சய வெற்றிப்படமாக இருக்கும் என்றார் இயக்குநர் சுராஜ்.

Leave a Response