
சீனுராமசாமி இயக்கத்தில் விஜய்சேதுபதி நடிப்பில் வெளியான ‘தர்மதுரை’ படம் ரசிகர்களின் வரவேற்பால் வெற்றிப்படமாக அமைந்தது. சீனுராமசாமி-விஜய்சேதுபதி இருவர் மீதான நம்பிக்கையையும் வியாபார எல்ல்லையையும் அதிகரித்திருக்கிறது.. ஆனாலும் இந்த நேரத்தில் நெருஞ்சி முள்ளாக உறுத்தும் விஷயம், இதே கூட்டணியில் உருவான இடம்பொருள் ஏவல் படம் இன்னும் வெளியாகாமல் இருப்பதுதான்..
அந்த வருத்தம் சீனுராமசாமிகு ரொம்பவே இருக்கிறது.. இருந்தாலும் படஹ்தை முடித்துக்கொடுத்தபின் அது வெளியாவது இயக்குனர் கையிலோ அல்லது நடிகர் கையிலோ இல்லையே.. திருப்பதி பிரதர்ஸ் தயாரித்த இந்தப்படம் அந்த நிறுவனத்தின் கடன் பிரச்சனைகளில் சிக்கிக்கொண்டு இன்னும் வெளியாக முடியாமல் தவிக்கிறது..
ஆனால் தர்மதுரை படம் படம் வெற்றி பெற்றிருப்பதால், ‘இடம் பொருள் ஏவல்’ படத்துக்கும் விடிவுகலாம் பிறக்கும்போல தான் தெரிகிறது. இந்தப்படத்தின் வெளியீடு எப்போது?என சீனுராமசாமியை கேட்டதற்கு, “இந்த திரைப்படமும் ‘தர்மதுரை’ மாதிரிதான். அந்தப்படம் எப்படி வெகுஜன மக்கள் வரவேற்கும்படி அமைந்ததோ, அதைவிட கூடுதலாக நகைச்சுவை சேர்த்துள்ளோம். அக்டோபரில் திரைக்கு வரும்” என்கிறார் நம்பிக்கையுடன்.


