
சென்னை,செப்.17 (டி.என்.எஸ்) கடந்த சில தினங்களாக தமிழகத்தின் ஒரு சில பகுதிகளில் தொடர் கன மழை பெய்து வருகிறது. ஆனால், சென்னையை பொறுத்தவரை அவ்வபோது மேகமூட்டத்துடன் காணப்பட்டு வந்தாலும், மழை பெய்யவில்லை. இதற்கிடையில் நேற்று இரவு புரசைவாக்கம், ஆல்வார்பேட்டை உள்ளிட்ட சில பகுதிகளில் லேசான மழை பெய்தது.
இன்று காலை முழுவதும் சென்னை முழுவதும் மேகமூட்டத்துடன் காணப்பட்டு வந்த நிலையில், மதியம் 12 மணிக்கு பலத்த மழை பெய்தது. பிறகு வானத்தில் இருள் சூந்து, தற்போது இரவு போல் காட்சியளிக்கும் சென்னை முழுவதும் பலத்த மழை பெய்து வருகிறது.


