சென்னை,செப்.17 (டி.என்.எஸ்) அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதாவுக்கு உச்ச நீதிமன்றம் ஜாமீன் வழங்கியதோடு, தண்டனையையும் நிறுத்தி வைத்து உத்தரவிட்டுள்ளது.

இந்த தகவல் வெளியானது அதிமுக-வினர் மகிழ்ச்சியில் ஆழ்ந்தனர். தமிழகம் முழுவதும் ஆங்காங்கே பட்டாசுக்களை வெடித்து அதிமுக-தொண்டார்கள் கொண்டாடி வருகிறார்கள்.
சென்னை,ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க. தலைமை கழகத்தில் திரண்டிருந்த நிர்வாகிகளும், தொண்டர்களும் மகிழ்ச்சியை வெளிப்படுத்தி பட்டாசு வெடித்தனர். இனிப்புகளும் வழங்கினார்கள்.
இதே போல் போயஸ் கார்டனில் உள்ள ஜெயலலிதா வீடு அருகேயும் தொண்டர்கள் பட்டாசு வெடித்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்கள்.


