17 வருடங்கள் நீடித்த ராதிகா, சன் டிவி உறவு முறிகிறது

1978 ஆம் ஆண்டு பாரதிராஜாவின் கிழக்கே போகும் ரயில் படத்தில் நாயகியாக அறிமுகமானார் ராதிகா. தொடர்ந்து தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி என்று எல்லா மொழிப்படங்களிலும் நடித்தார்.

1999 ஆம் ஆண்டு சித்தி நெடுந்தொடர் மூலம் சின்னத்திரைக்குள் வந்தார். சன் தொலைக்காட்சியில் இரவு 9.30 மணிக்கு ஒளிபரப்பான அந்தத் தொடர் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றதோடு பல பரபரப்புகளையும் கிளப்பியது.

அதன்பின், அதே நேரத்தில் அண்ணாமலை, செல்வி, அரசி, செல்லமே ஆகிய தொடர்களில் நடித்தார். 2013 முதல் அவர் இரட்டை வேடங்களில் நடிக்கும் வாணிராணி தொடர் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கிறது.

கடந்த 17 ஆண்டுகளாக இரவு 9.30 மணிக்கு சன் தொலைக்காட்சியில் வந்து கொண்டிருந்த ராதிகாவின் பயணம் நிறைவுறவிருக்கிறது.

பல்வேறு அரசியல் மாற்றங்களுக்கிடையேயும் அவருக்கு இடம் கொடுத்து வந்த சன் தொலைக்காட்சி இப்போது அவரை வெளியேற்ற முடிவு செய்துவிட்டதாம்.

விரைவில் வாணிராணி தொடர் முடிவுக்கு வருகிறது. அந்த நேரத்தில் நடிகை குஷ்புவின் தயாரிப்பில் புதிய தொடர் ஒளிபரப்பாகவிருக்கிறதாம். அது வரலாற்றுத் தொடராக இருக்கும் என்றும் இயக்குநர் சுந்தர்.சியின் பங்களிப்பு அதில் இருக்குமென்றும் சொல்லப்படுகிறது.

Leave a Response